தென்காசி
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அடுத்துள்ள பெரிய பிள்ளை வலசை ஊராட்சி ஒன்றிய பகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் முகாமை துவக்கி வைத்து பொதுமக்களின்மனுக்களை உடனுக்குடன் துரித நடவடிக்கை எடுத்து மக்களுக்கு எளிய வகையில் அனைத்து அரசு அலுவலகங்களும் ஒரே இடத்தில் கிடைக்கப்படுவது மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக கூறி வருகின்றனர்
காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் தமிழ்நாடு அரசின் அனைத்து திட்டங்களுக்கும் உடனுக்குடன் மனுக்களாக பெறப்பட்டு அதற்குரிய சம்பந்தப்பட்ட நிர்வாக அதிகாரிகளிடம் அந்த மனுக்கள் ஆனது பரிசீலினை செய்யப்படுவது உள்ளபடியே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது
இந்நிகழ்ச்சியில் தென்காசி மேற்கு ஒன்றிய செயலாளர் வல்லம் திவான் ஒலி நிகழ்ச்சியினை துவக்கி வைத்தார் இந்நிகழ்ச்சியில் பெரிய பிள்ளை வலசை ஊராட்சி தலைவர் வேல்சாமி மாநில பொதுக்குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வி தென்காசி பஞ்சாயத்து கவுன்சிலர் பூங்கொடி கிளைச் செயலாளர் முருகேசன் கருப்பசாமி கலங்காத கண்டி சரவணன் தென்காசி மேற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பகுருதீன் பாவா மற்றும் சிறுபான்மை அணி அமைப்பாளர் பண்பொழி முகமது கபீர் .உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.