மாவட்ட செய்தியாளர் முகம்மது இப்ராகிம்

தென்காசி
தென்காசி மாவட்டம் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து கண்காணிப்பாளர் .S.அரவிந்த் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவில் கடைபிடிக்க வேண்டிய முக்கிய விதிமுறைகள் குறித்து விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யும் பொறுப்பாளர்களுடனான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டுமே விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட வேண்டும் எனவும், விநாயகர் சிலை வைக்கும் இடத்தில் இரவு நேரங்களில் போதிய மின் வசதி இருக்க வேண்டும் எனவும், சிலை அமைக்கப்பட்டுள்ள பகுதியில் தகரத்தினால் கூரை அமைக்கப்பட வேண்டும் எனவும், சிலைகள் அமைந்துள்ள இடத்தில் தீ தடுப்பு உபகரணங்கள் மற்றும் கேமராக்கள் வைத்திருக்க வேண்டும் எனவும், விநாயகர் சிலை வைத்திருக்கும் இடத்தில் அரசியல் மற்றும் ஜாதியை குறிக்கும் வகையில் எந்தவித பிளக்ஸ் போர்டுகளும் அமைக்க கூடாது, விநாயகர் சிலை வைத்திருக்கும் இடத்தில் தன்னார்வலர்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும், விநாயகர் சிலை ஊர்வலம் குறிப்பிட்ட தேதியில் குறிப்பிட்ட நேரத்தில் அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் மட்டுமே எடுத்துச் செல்ல வேண்டும் எனவும், ஊர்வலத்தின் போது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் யாரும் நடந்து
கொள்ளக் கூடாது எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலந்தாய்வு கூட்டத்தில் அறிவுரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தென்காசி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் தமிழினியன் அவர்கள் மற்றும் மாவட்ட குற்ற ஆவண காப்பகம் துணை காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் பாபு அவர்கள் மற்றும் மாவட்டம் முழுதும் உள்ள விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பொதுமக்களு இடையூறு ஏற்படாத வகையில் ஊர்வலத்தை நடத்திட வேண்டும் என்றும் போதிய பாதுகாப்பு வசதிகள் மாவட்ட காவல்துறை மூலம் ஏற்படுத்தி தரப்படும் என்றும் காவலர்கள் முழு வீச்சில் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபடுவார் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.