போடிநாயக்கனூர் கார்டமம் பிளாண்டர்ஸ் அசோசியேசன் கல்லூரியில் பட்டமளிப்பு விழா தேனி எம்பி மாணவ மாணவியர்களுக்கு பட்டங்களை வழங்கினார் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தமிழகம் கேரளாவை இணைக்கும் முந்தல் சாலையில் அமைந்துள்ள இயற்கை எழில் கொஞ்சும் கலை மற்றும் அறிவியல் கல்லூரியான கார்டமம் பிளாண்டர்ஸ் அசோசியேசன் கல்லூரியில் 42 ஆவது பட்டமளிப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது.
இந்த விழாவிற்கு கல்லூரியின் தலைவர் எஸ் வி சுப்ரமணியன் தலைமை வகித்தார் தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்கத்தமிழ் செல்வன் எம்பி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 2024 ஆம் ஆண்டு பட்டம் பெற்ற 360.மாணவ மாணவியர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.
விழாவின் முக்கிய நிகழ்வாக 2024 கல்வி யாண்டில் தங்ஙளது கல்வி பயணத்தை நிறைவு செய்த 360 மாணவ மாணவியர்ளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. பட்டம் பெற்ற மாணவ மாணவியர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்
கல்லூரியின் முதல்வர் முனைவர் எஸ் சிவக்குமார் கல்லூரியின் சிறப்பம்சங்களை எடுத்துரைத்து அனைவரையும் வரவேற்று பேசினார்.
இந்த விழாவில் கல்லூரியின் செயலாளர் மற்றும் தொடர்பாளர் ஆர் புருஷோத்தமன் கல்லூரி முதல்வர் டாக்டர் எஸ். சிவக்குமார் கல்லூரி நிர்வாக குழு உறுப்பினர்கள் டாக்டர் பி.சிவப்பிராகஷம் வி.சொரூபன் பி. இராதாகிருஷ்ணன் ஆர்.சி. பிரபு மற்றும் கல்லூரி சொசைட்டி நிர்வாகக்குழு உறுப்பினர் எஸ். ஞானவேல் உள்பட கல்லூரி இருபால் பேராசிரியர்கள் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரி கண்காணிப்பாளர் யுவராஜாசேகரன் தலைமையில் பேராசிரியர்கள் அலுவலக பணியாளர்கள் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்