கரூர் செய்தியாளர் மரியான் பாபு
கரூர் மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு தமிழர் தேசம் கட்சியினரின் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டம் மாயனூரில் 1000க்கும் மேற்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் விதமாக கட்டளை மேட்டு வாய்க்காலின் இருபுறமும் சிமெண்ட் தடுப்பு சுவர் அமைப்பதை தடுத்து நிறுத்தி உயிர் மீன்கள் வியாபாரம் செய்து பிழைப்பு நடத்தும் விதமாக படிக்கட்டுகளுடன் கூடிய இறங்கும் தளம் அமைத்து மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வலியுறுத்தி மாவட்ட அவைத்தலைவர் வை. வேல்முருகன் முத்துராஜா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கரூர் மாவட்டம் மாயனூர் உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர்கள் காவிரி ஆறு மற்றும் அதன் கிளை வாய்க்காலில் மீன் பிடித்து தொழில் செய்து வருகின்றனர். கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டம் மாயனூர் கிராமத்தில் அமைந்துள்ள காவிரி ஆற்றில் கட்டப்பட்ட கதவணை அருகில் உள்ள (எஸ்பிசி) தென்கரை வாய்க்கால் அருகில் மீன் மார்க்கெட் அமைத்து மீன்கள் விற்பனை செய்து வருகிறார்கள். இந்த மார்க்கெட்டில் விற்கப்படும் உயிர் மீன்கள், உயிர் மீன்கள் விற்பதால் கரூர், திருச்சி மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் இருந்து வாடிக்கையாளர்கள் வந்து மீன்களை மொத்தமாகவும், சில்லறையாகவும் வாங்கி செல்கின்றனர்.
இதனால் மாயனூர் மீன் மார்க்கெட் நல்ல பெயருடன் இயங்கி வருகிறது. இதை நம்பி சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். தங்களுடைய குடும்பங்கள் வாழ்வாதாரமே இந்த மீன் மார்க்கெட்டில் தான் தற்பொழுது குண்டாறு திட்டம் மூலமாக நாங்கள் மீன் விற்பனை செய்யும் இடத்தில் வாய்க்கால் ஓரமாக சறுக்கம் கட்டுகிறார்கள்.
இந்த சறுக்கள் கட்டி விட்டால் நாங்கள் பிடித்து வரும் மீன்கள் வாய்க்காலில் இறங்கி வைக்க முடியாது. மீன்கள் உயிருடன் விற்பனை செய்ய முடியாது. உயிர் மீன்கள் விற்பனை இல்லையென்றால் இங்கு மீன்கள் வாங்க வரும் வாடிக்கையாளர்கள் குறைந்து போவார்கள்.
இதனால் எங்களுடைய வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. எனவே தடுப்பு சுவர் அமைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தடுத்து நிறுத்த வேண்டுமென வலியுறுத்தியும் இக்கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் குரு.மணிகண்டன் முத்துராஜா கண்டன உரை நிகழ்த்தினார். மாவட்ட இணைச்செயலாளர் இளங்கோவன் முத்துராஜா, மாநில பொதுச் செயலாளர் தளவாய் சுரேஷ், மாவட்ட இணைச் செயலாளர் ஸ்ரீரங்கன், மாநகரச் செயலாளர் ரகுநாதன் முத்தரையர், மாநகர ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம் அம்பலம், ஒன்றிய செயலாளர் சரவணன் மற்றும் வீர முத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் மாநில இளைஞரணி செயலாளர் கைது. குணா, என நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.