திருவாரூர் செய்தியாளர் வேலா செந்தில்,

முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் “நகர்புறங்களிலுள்ள, அரசு உதவிபெறும் பள்ளிகளில்”; விரிவுப்படுத்தி இன்றைய தினம் (26.08.2025) துவக்கி வைத்தார்.
அதன் ஒரு பகுதியாக..

திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட ஆர்.சி.பாத்திமா துவக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் தொடக்க விழா நடைபெற்றது.  மாவட்ட ஆட்சித்தலைவர் வ.மோகனச்சந்திரன், நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் வை.செல்வராஜ் , திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் தபூண்டி.கே.கலைவாணன்  ஆகியோர் விழாவில் பங்கேற்றனர்.  

அதனடிப்படையில், திருவாரூர் மாவட்டத்தில், 36 (28 நகர்புறம், 8 ஊரகம்) அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 4386 பள்ளி மாணவ, மாணவியர்கள் பயன்பெறுகின்றனர்.

மேலும், இது 5வது கட்டமாகும். இதுவரை நான்கு கட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில், திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் சௌம்யா, திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) பொன்னம்பலம், முதன்மை கல்வி அலுவலர் சௌந்தர்ராஜன், நகர்மன்றத்தலைவர் புவனப்பிரியா செந்தில், நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா, நகர்மன்ற உறுப்பினர்கள் பிரகாஷ், ஐஸ்வர்யா பாஸ்கர், பள்ளி தலைமை ஆசிரியர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *