திருவாரூர் செய்தியாளர் வேலா செந்தில்,


திருவாரூர் மாவட்டம் நீலக்குடியில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்திய மத்திய பல்கலைக்கழகத்தின் பத்தாவது பட்டமளிப்பு விழா 2025 செப்டம்பர் 3 ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது.

இதில் இந்திய குடியரசு தலைவர் மற்றும் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் மேன்மையர் திரௌபதி முர்மு அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார்.

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் பத்தாவது பட்டமளிப்பு விழாவில் இந்திய குடியரசு தலைவர் உரை நிகழ்த்தி மாணவர்களுக்கு ஊக்கம் அளிப்பார். மேலும் தங்க பதக்கம் பெறும் மாணவர்களுக்கு பதக்கங்களை வழங்குவார்.

இந்த ஆண்டு மொத்தம் 1,010 மாணவர்கள் பட்டம் பெறுகின்றனர். இதில் 568 பெண்கள், 442 ஆண்கள் ஆவர். இதில் 45 மாணவர்கள் (34 பெண்கள் 11 ஆண்கள்) தங்கப்பதக்கம் வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு 44 மாணவர்கள் முனைவர் பட்டம் பெறுகின்றனர். (இதில் 27 பெண்கள் மற்றும் 17 ஆண்கள்).

நேரில் பட்டம் பெறும் மாணவர்கள் மொத்தம் 771. இதில் 454 பெண்கள் மற்றும் 317 ஆண்கள் ஆகும்.

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம், 2009 ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்தின்படி தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டது.
தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம், 13 கல்வி புலன்களின் கீழ் 28 துறைகளைக்கொண்டு சிறந்து விளங்குகிறது. தேசிய தர மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சிலின் (NAAC) ஆய்வில், ‘ஏ ப்ளஸ்’ (A+) தர அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. தேசிய நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியலின்படி (NIRF), கடந்த மூன்று ஆண்டுகளாக நூறு சிறந்த பல்கலைக்கழகங்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.
மேலும், மத்திய அரசின் உயிரித் தொழில்நுட்பத் துறை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சிக் கழகம், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் போன்ற பல்வேறு ஆய்வு நிறுவனங்களிடமிருந்து பல்வேறு மானியங்களைப் பெற்று, பல ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. பல்கலைக்கழகத்தின் ஆய்வுக்கான குறியீடான, எச் இன்டெக்ஸ் (h-index) அளவுகோலில், 2025 ஆம் ஆண்டில் ஆகஸ்ட் மாதம் வரை 84 ஆக உயர்ந்துள்ளது.
தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளில் சிறந்து விளங்குவதோடு கல்வியின் பலன்களை, இந்தியாவின் கிராமப்புறங்களை சென்று சேர்க்கும் பொறுப்புள்ள குடிமக்களை உருவாக்கி வருகின்றது.

இத்தகவலை பல்கலைக்கழகத்தின் மாண்பமை துணைவேந்தர் பேராசிரியர் மு கிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *