கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரி பல்கலை கோகோ போட்டியில் சாம்பியன் அன்னை தெரசா மகளிர் பல்கலை அளவிலான கோகோ போட்டிகளில் பங்கேற்ற ஸ்ரீ ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரி மாணவிகள் சாம்பியன் பட்டம் பெற்றனர்
கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலை அளவிலான கோகோ போட்டி நடைபெற்றது கல்லூரியின் நிறுவனச் செயலாளர் கம்பம் என் ராமகிருஷ்ணன் எம் எல் ஏ தலைமை வகித்தார்
இணைச்செயலாளர் ஆர் வசந்தன் ஒருங்கிணைப்பாளர் வைஷ்ணவி வசந்தன் கல்லூரி முதல்வர் டாக்டர் ஜி ரேணுகா ஆகியோர் முன்னிலை வகித்தனர் கல்லூரியின் உடற் கல்வி ஒருங்கிணைப்பாளர் சுசீலா வரவேற்ற பல்கலை உடற்கல்வி துணை இயக்குனர் ராஜம் போட்டிகளை துவக்கி வைத்தார்
இந்த போட்டிகளில் கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலை கழகத்திற்கு உட்பட்ட 10 கல்லூரிகள் பங்கேற்றன இதில் கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரி மாணவிகள் முதலிடம் பெற்று சாம்பியன் பட்டம் பெற்று வரலாற்று சாதனை படைத்தனர் இரண்டாம் இடத்தில் திண்டுக்கல் மாவட்டம் பழனி ஆண்டவர் மகளிர் கல்லூரியும் மூன்றாம் இடத்தில் தேனி நாடார் சரஸ்வதி கல்லூரியின் நான்காம் இடத்தை திண்டுக்கல் செயின்ட் ஆண்டனிஸ் கல்லூரி பிடித்தன.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு கேடயங்கள் பதக்கம் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு ஊக்குவி க்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியை சூரிய பிரபா உறுப்பினர் முனீஸ்வரி ஆலோசனை உறுப்பினர்கள் விரிவுரையாளர்கள் கல்லூரி அலுவலர்கள் மாணவிகள் கலந்து கொண்டனர்