தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அரியலூர் மீனாட்சி ராமசாமி பொறியியல் கல்லூரி சைபர் சேப்டி கிளப் இணைந்து சைபர் குற்றங்களை தடுக்க கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி மீனாட்சி ராமசாமி கல்வி குழும தலைவர் ரகுநாதன், இயக்குனர் ராஜமாணிக்கம், நிர்வாக இயக்குனர் செந்தில்குமரன் வழிகாட்டுதலில் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் பழனிவேல் துவக்க உரையாற்றினார். தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் ராஜன் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் சிஏஜி உறுப்பினர் சிவசங்கர் சேகரன் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைய வழிகாட்டுதல் நெறிமுறைகளை எடுத்துரைத்தார்.அரியலூர் மாவட்ட இணைய குற்ற காவல் நிலைய முதல் நிலை காவலர் சுதாகர், வசந்தி உள்ளிட்டோர் சைபர் குற்றங்களை தடுக்க விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
கட்டிடவியல் துறை தலைவர் விக்னேஷ் குமார் இயந்திரவியல் துறை தலைவர் தங்கபாலு மின்னணுவியல் துறை தலைவர் பாரதிராஜா உயிர் தொழில்நுட்பவியல் துறை தலைவர் ஜெயலட்சுமி செயற்கை நுண்ணறிவு துறை தலைவர் ராஜ சந்துரு மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை தலைவர் சீதா உட்பட கல்லூரி பேராசிரியர்கள் உதவி பேராசிரியர்கள் மற்றும் இளங்கலை பொறியியல் மாணவர்கள் நிகழ்வில் பங்கேற்றனர்.