கோவை மாநகராட்சி சுகாதார குழு தலைவர் மாரிச்செல்வன் தலைமையில் காந்திபுரம் வெளியூர் பேருந்து நிலையத்தில் “மாஸ் கிளீனிக்”
50 க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஒரே நேரத்தில் ” மாஸ் கிளீனிக்” பணியில் ஈடுபட்டனர்
முதல்வரின் கனவு நினைவாக்கும் வகையில் குப்பையில்லா மாநகராட்சியாக உருவாக்க திட்டம் – சுகாதாரக்குழு தலைவர் பேட்டி
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுகாதாரத்தை பேணும் வகையில், தூய்மை பணிகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில், கோவை காந்திபுரம் வெளியூர் பேருந்து நிலையம் மற்றும் டவுன் பேருந்து நிலையத்தில் தினமும் பல லட்சக்கணக்கான பயணிகள் பயன்படுத்தி வரும் நிலையில், நேற்று இரவு (26-8-25) கோவை மாநகராட்சி சுகாதாரக்குழு தலைவர் மாரிச்செல்வன் தலைமையில், காந்திபுரம் பேருந்து நிலையத்தில் “மாஸ் கிளீனிக்” பணியில் 50 க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர். பேருந்து நிலையம் பகுதி முழுவதும் தண்ணீரில் பீச்சி அடிக்கப்பட்டும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டும் தூய்மைப்படுத்தப்பட்டது.
தொடர்ந்து மாநகராட்சி சுகாதாரக்குழு தலைவர் மாரச்செல்வன் பேட்டியின்போது கூறுகையில்;-
கோவை மாநகராட்சி பகுதியில் குப்பையில்லா மாநகராட்சியாக மாற்ற தினமும் சுத்தம் செய்யப்பட்டு வருகின்றது. இதுதவிர ஒவ்வொரு பகுதியிலும் மாஸ் கிளீனிக் என்ற முறையில் அதிகளவிலான தூய்மை பணியாளர்களை கொண்டு தூய்மைப்படுத்தப்படுகின்றது. இதேபோல், இன்று பல லட்சம் பேர் வந்து செல்ல கூடிய இடமாக உள்ள காந்திபுரம் வெளியூர் பேருந்து நிலையம் மற்றும் டவுன் பேருந்து நிலையங்களில் தூய்மைப்பணி நடைபெற்றது. முதல்வரின் கனவு நினைவாகும் வகையில், குப்பையில்லா கோவை மாநகராட்சியாகவும், தூய்மையான மாநகராட்சியாகவும் உருவாக்கி வருகின்றோம், இப்பணி எப்போதும் தொடரும் என கூறினார்.
இந்த மாஸ் கிளீனிக்கின்போது, மாமன்ற உறுப்பினர் வித்யா இராமநாதன், மாநகராட்சி நகர்நல அலுவலர் மரு.பூபதி, சுகாதார ஆய்வாளர் குணசேகரன், வட்டச்செயலாளர் இராமநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.