போடிநாயக்கனூர் நகராட்சியில் விநாயகர் சதுர்த்தி விழா
கோலாகல கொண்டாட்டம் தேனி மாவட்டம் போடி நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள விநாயகர்கோவிலில் விநாயகர் சதூர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் விநாயகருக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன
இந்த விழாவில் நகராட்சி நகர் மன்ற தலைவர் ராஜேஸ்வரி சங்கர் முன்னாள் நகராட்சி நகர் மன்ற தலைவர் எம். சங்கர், ஆணையாளர் எஸ் பார்கவி மேலாளர் முனிராஜ் பொறியாளர் குணசேகரன், சுகாதார அலுவலர் மணிகண்டன், கட்டிட ஆய்வாளர் சுகதேவ் மற்றும் கவுன்சிலர்களும் பணியாளர்களும் கலந்து கொண்டனர்.