திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் பழனியில் பல்வேறு முக்கிய பகுதிகளில் ஒரு வழி பாதையாக மாற்றிய முயற்சியில் போக்குவரத்து நெரிசல் முற்றிலுமாக குறைந்து பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து இன்னும் ஒரு சில நாட்களில் முக்கிய பகுதிகளில் சிக்னல்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.இதில் இன்னும் ஒரு சில முக்கிய பகுதிகள் ஒரு வழி பாதையாக மாற்றப் போவதாக பழனி நகர் துணை கண்காணிப்பாளர்.தனஞ்செயன் தகவலை தெரிவித்துள்ளார்.