கந்தர்வகோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் ஆகஸ்ட் மாதத்திற்கான துளிர் மாத இதழில் வாசிப்பு திருவிழா நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி தலைமை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்க கந்தர்வக்கோட்டை ஒன்றிய செயலாளரும், அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ரகமதுல்லா நிகழ்வினை ஒருங்கிணைத்தார்.
ஆகஸ்ட் மாத துளிர் மாத இதழில் ஒலிபெருக்கி அறையாய் மாறும் கண்ணாடி அறை, செயற்கைக் கருப்பை, நம் உணவே நம் உணர்வு, வானில் ஒளி நிகழ்வுகள், காகித கொக்குகள் தூது, ஓசோன் படலத்தில் ஓட்டையா, தானாக கடக்கும் ரோபோட் உள்ளிட்ட தலைப்புகளில் மாணவ, மாணவிகள் இனியா ,சுபிக்ஷா, ரிதன்யா, முகேஷ், சந்தோஷ், ரிஷிகேஷ், அஸ்வின், வித்யா, தேவதர்ஷினி, ஹரிணி ,ஜீவிதா சத்யஸ்ரீ உள்ளிட்டோர் வாசித்து தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்தனர்.
புதிய புதிய அறிவியல் செய்திகளை அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் பேசினார்கள்.மாணவர்கள் அனைவரும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்தும் துளிர் திறனறிவுத் தேர்வில் கலந்துகொண்டு தேர்வினை எழுத வேண்டும் என்றும் எதிர்காலத்தில் போட்டித் தேர்வு எழுதுவதற்கு சிறப்பாக உதவி புரியும் எனவும், ஒவ்வொரு மாணவரும் அறிவியல் மனப்பான்மை வளர்க்கும் விதமாக விஞ்ஞான துளிர் இதழை வாசிக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டது. நிகழ்வில் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.