தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற்றது. இதில் விவசாயிகள் தங்களது கோரிக்கையை மனுக்காக கொடுத்து பேசினார்.
இக்கூட்டத்தில் பதிவு எண் 27/2024 தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் எல்.பழனியப்பன்,மாநில பொருளாளர் வி.எஸ்.வீரப்பன்
மற்றும்விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகள்ஆகியோர்கள் கலந்து கொண்டு 2025—2026 ஆண்டுகளில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பயிர்களுக்கு ஏக்கருக்கு 36 மேல்
கூடுதலாக விவசாயிகள் 40 சதவீதம் அல்லது 30 சதவீதம் விவசாயிகள் கூடுதலாக
விவசாயகூட்டுறவு சங்கங்கள் மூலமாக வழங்க வேண்டும்.
விவசாய கூட்டுறவு சங்கங்கள் மூலமாக பால் மாடு வாங்க கூடுதலாக கடன் வழங்க வேண்டும் விவசாய கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் நகை
அடகு வைத்து மீண்டும் நகையை புதுப்பித்து வைக்கும் பொழுது
விவசாயிகளிடம் நகைக்கு உண்டான பணத்தை கட்டி மறுநாள் நகை அடகு வைக்க வேண்டும் என்று சொல்வதை மாற்றி விவசாயிகள் அடகு வைத்த நகையை உடன் புதுப்பித்து விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டும்.ஒரு விவசாயிகளுக்கு உச்சவரமாக எத்தனை ஏத்தருக்கு லோன் வழங்கலாம் என்று தெளிவாக அறிவிக்க வேண்டும்
விவசாயி சொல்லும் கோரிக்கைகளை ஏற்று அரசாங்கமே அனைத்து பயிர்களையும் ஒரு ஏக்கர் நிலம் வீதம் விவசாயம் செய்து
அதற்கு உண்டான செலவுகளை கணக்க வைத்து வருமானம் எவ்வளவு வருகிறது என்று தெரிந்து அதற்கு மேல் விவசாயிகளுக்கு கூடுதலாக 50 சதவீதம் கூடுதலாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.அரசு அதிகாரிகள் அனைத்தையும் கவனமாக கேட்டு தமிழக அரசுக்கு தெளிவாக பதிவு செய்கிறோம் என்று உத்தரவாதம் கொடுத்துள்ளார்கள் .
கூட்டத்தில் மாவட்ட அலுவலர் தியாகராஜன், வேளாண்மை இணை இயக்குனர் வித்யா, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தயாளவிநாயகன் அமுல்ராஜ் நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் செல்வம் மற்றும் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்