திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள சந்திரசேகரபுரம் அருள்மிகு ஶ்ரீ மடத்து பிள்ளையார் திருக்கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. 28- ந்தேதி வியாழக்கிழமை மாலை யாகசாலை பூஜைகள் தொடங்கி முதல் காலம் பூஜை, தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் அருட் பிரசாதம் வழங்கப்பட்டது.
29- ந்தேதி வெள்ளிக்கிழமை காலை யாகசாலை பூஜைகள் தொடங்கி இரண்டாம் காலம் பூஜை, தீபாராதனை நடைபெற்று, காலை 9- மணிக்கு கடம் புறப்பாடு நடைபெற்று காலை 10.30 மணிக்குள் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. யாகசாலை பூஜைகளை ஆலய போதகர், சிவாகம கலாநிதி, அலங்கார பூஷணம், சிவஸ்ரீ அகோர சிவ சந்திரசேகரபுரம் கே.எஸ். வீரமணி சிவாச்சாரியார் மற்றும் குழுவினர், ஆலய அர்ச்சகர் சிவாகம பாஸ்கரா சந்திரசேகரபுரம் வி. சேகர் சிவம் சிறப்பாக செய்திருந்தனர். விழாவில் ஆலய தக்கார்/ செயல் அலுவலர் கோ.கிருஷ்ணகுமார், ஆய்வாளர் க. மும்மூர்த்தி, டி. ஸ்ரீராம் அய்யர், என். கோபாலன் அய்யர், ஆர். சந்திரமெளலி அய்யர் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள், பக்தர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை ஆலய தக்கார்/ செயல் அலுவலர் கோ. கிருஷ்ணகுமார், ஆய்வர் க. மும்மூர்த்தி மற்றும் சந்திரசேகரபுரம் கிராமவாசிகள் சிறப்பாக செய்திருந்தனர்.