கோவையில் சர்வதேச பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற செஸ் போட்டி
ரீஜினல் அசோசியேஷன் ஆஃப் இண்டர்நேஷனல் ஸ்கூல்ஸ் மற்றும் தமிழ்நாடு கேம்பிரிட்ஜ் பள்ளிகள் கூட்டமைப்பு இணைந்து நடத்திய இதில் பள்ளி மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு
மாணவர்களின் விளையாட்டுத் திறனை வளர்த்துக் கொள்ளவும், பள்ளிகளிடையே நட்புறவை ஏற்படுத்தவும்,சர்வதேச புள்ளிகள் கூட்டமைப்பு சார்பாக சர்வதேச பள்ளிகளில் பயிலும் பள்ளி மாணவர்களுக்கு ஆண்டுதோறும் வாலிபால், கால்பந்து, த்ரோபால், கோ-கோ, செஸ், யோகாசனம், கேரம், ஸ்கேட்டிங்,உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன..
இதன் தொடர்ச்சியாக சர்வதேச பள்ளி மாணவர்களுக்கான செஸ் போட்டி வெள்ளக்கிணறு பகுதியில் உள்ள தி ஹில்சைட் பிரெப் (The Hillside Prep) சர்வதேச பள்ளியில் நடைபெற்றது…
முன்னதாக போட்டிகளை பள்ளியின் தலைவர் திருமதி நித்யா கோகுல் துவக்கி வைத்தார் மண்டல அளவில் நடைபெற்ற இதில்,கோவை,திருப்பூர்,நீலகிரி, ஈரோடு,சேலம்,நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள சர்வதேச பள்ளிகளில் இருந்து 300 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்..
8 வயது முதல் 19 வயதுக்கு உட்பட்ட பிரிவுகளில் மாணவ,மாணவிகளுக்கு தனித்தனியே போட்டிகள் நடைபெற்றன..
பல்வேறு சுற்றுகளாக நடைபெற்ற இதில்,முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ,மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டது..
இது குறித்து பள்ளியின் விளையாட்டு துறை இயக்குனர் ஆல்வின் மற்றும் ஒருங்கிணைப்பாளர் ரஹ்மத் ஆகியோர் கூறுகையில், மாணவர்களின் விளையாட்டு திறன்களை ஊக்குவிக்கும் விதமாக போட்டிகள் நடைபெறுவதாகவும்,,தேசிய சர்வதேச அளவிலான போட்டிகளில் பள்ளி மாணவர்கள் சாதிப்பதற்கு ஊக்கம் தரும் வகையில் போட்டிகள் நடைபெறுவதாக தெரிவித்தனர்…