மதுரை அண்ணாநகரில் அமைந்துள்ள வேளாங்கண்ணி ஆலய திருவிழா, பாளை மறைமாவட்ட மேனாள் ஆயர் ஜுடு பால்ராஜ், அன்னையின் திரு உருவக் கொடியினை அர்ச்சித்து , ஏற்றிவைத்து திருவிழாவை துவக்கி வைத்தார்.பின்னர் ஆடம்பர கூட்டுத்திருப்பலியை நிறைவேற்றினார்.

செப்டம்பர் 07 ம் தேதி வரை தினமும் மாலை 6.00 மணிக்கு அன்னையின் திரு உருவப் பவனி ஆலயத்தைச் சுற்றியுள்ள சாலைகளில் வந்து, பல குருக்கள் கூட்டாக இணைந்து நடத்தும் திருப்பலி நடைபெறும். நகரில் உள்ள அனைத்துப் பங்குகளிலிருந்தும், கல்வி நிறுவனங்களிலிருந்தும், மாணவ-மாணவியர், ஆசிரிய, ஆசிரியைகள், அலுவலர்கள். இறைமக்கள் கூடி திருப்பலியில் பங்குபெறுவர். செப்டம்பர் 07ம் தேதி வரை தினம் தோறும், ஒவ்வொரு தினமாக மருத்துவர் செவிலியர் தினம், முதியோர் தினம், மறைக்கல்வி மாணவர் தினம், தொழிலாளர் தினம், பக்த சபைகள் தினம், ஒப்புரவு தினம், ஆசிரியர் தினம், துறவியர் தினம், தம்பதியர் தினமாக சிறப்பாக நடைபெறும்.

07 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்னையின் பக்தர்கள் காலை 7 மணிக்கு நேர்ச்சை பொங்கல் வைக்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. அன்று மாலை 5.30 மணி திருப்பலி மதுரை உயர் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோணிசாமி சவரிமுத்து தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெறும். அன்று மாலை திருப்பலிக்குப் பின் நற்கருணை பவனி நடைபெறும்.அன்னையின் பிறந்த நாளான 08 ம் தேதி பெருவிழா காலை 7.30 மணி, 9.30 மணி, 11.00 மணிக்கு திருப்பலிகள் நடைபெறும்.

காலை 11.00 மணி திருப்பலி சிவகங்கை மறைமாவட்ட ஆயர் மேதகு லூர்து ஆனந்தம் தலைமையில் சிறப்பு திருப்பலியும் திருப்பலி முடிந்தவுடன் அன்பின் விருந்து (சமபந்தி) நடைபெறும்.
பிற்பகல் 3.30 மணிக்கு ஆங்கிலத்தில் திருப்பலி நடைபெறும்.

மாலை 6.00 மணிக்கு மதுரை உயர்மறைமாவட்டப் மேனாள் பேராயார் மேதகு அந்தோணி பாப்புசாமி தலைமையில் ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடைபெறும். தொடர்ந்து அன்னையின் திரு உருவ சப்பர பவனி நடைபெறும். பகல் முழுவதும் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் பங்கேற்பர். சப்பர பவனியைத் தொடர்ந்து திவ்ய நற்கருணை ஆசீர் வழங்கப்படும்.

அதை தொடர்ந்து அன்னையின் திருவுருவ தேர்ப் பவனி அண்ணாநகர் முக்கிய சாலைகளில், பக்தர்களின் கூட்டத்தில் பவனி வந்து ஆலயத்திற்கு வந்து சேரும், அதன் பின் திவ்ய நற்கருணை ஆசிர் நடைபெறும். பின் 9.9.2025 திங்கட்கிழமை காலை 6.30மணிக்கு நன்றி திருப்பலியும் கொடி இறக்கம் நடைபெறும்.

கொடி இறக்கத்துடன் இவ்வாண்டிற்கான பெருவிழா இனிதே நிறைவுபெறும். 29.08.2025 முதல் 08.09.2025 வரை பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் பங்குபெற்று அன்னையின் ஆசி பெற பங்குத்தந்தை அழைக்கிறார். விழா ஏற்பாடுகளை அதிபரும், பங்குத்தந்தையுமான அருட்பணி. எட்வின் சகாயராஜாவுடன் உதவிப்பங்குத்தந்தை தாமஸ், அருட்சகோதரிகள், பங்குபேரவை, பக்த சபையினர், இறைமக்கள் ஆகியோர் இணைந்து சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *