பச்சபெருமாள்பட்டியில்”உங்களுடன் ஸ்டாலின்” முகாம்-எம்எல்ஏ ஸ்டாலின்குமார் துவக்கி வைத்தார்

துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியம் பச்சபெருமாள்பட்டி சந்தை திடலில் நேற்று பச்சபெருமாள்பட்டி ,அழகாபுரி ஊராட்சிகளுக்கு (ஆக-28)”உங்களுடன் ஸ்டாலின்” முகாம் நடைபெற்றது.முகாமை எம்எல்ஏ ஸ்டாலின் குமார் துவக்கி வைத்து பொது மக்களிடம் மனுக்களை பெற்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கொடுத்து விரைந்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.

இம்முகாமில் பச்சபெருமாள்பட்டி, அழகாபுரி ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் பட்டா, ரேசன் கார்டு, மகளிர் உரிமைத் தொகை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட தங்களது கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். இந்நிகழ்வில் எம்எல்ஏ ஸ்டாலின்குமார் கர்ப்பிணி பெண்களுக்கு மருத்துவ பெட்டகத்தை வழங்கினார். இம்முகாமில் வருவாய்த்துறை,மின்சார துறை,காவல் துறை,வட்ட வழங்கல் துறை, மாற்றுத்திறனாளிகள் துறை, மருத்துவ துறை, கூட்டுறவு துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, தகவல் தொழில்நுட்ப வியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை,குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, வேளாண்மை துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை உள்ளிட்ட 15 துறையினர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றனர்.முகாமில் ஒன்றிய செயலாளர்கள் அர.ந.அசோகன், முத்துசெல்வன்,வட்டாட்சியர் மோகன் ,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பழனிசாமி, செந்தில்குமார்,மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்லதுரை,
ஊராட்சி செயலர்கள் மதன், அசோகன், மண்டல துணை வட்டாட்சியர்கள் கோவிந்தராஜ், பிரபாகரன், வருவாய் ஆய்வாளர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள் பிரபு,ரெங்கராஜ் மற்றும் 900க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு மனு அளித்தனர்.

வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *