எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் மாநில மாநாடு. 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றல். தங்களது கோரிக்கைகளை அரசு விரைந்து நிறைவேற்றவும் கோரிக்கை:-
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோவில் தனியார் திருமண அரங்கில் மாநில தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் சார்பாக மாநில மாநாடு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் சுதா, மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.தமிழக முழுவதும் இருந்து பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த தனியார் பள்ளி தாளாளர்கள் முதல்வர்கள் ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் திரளானோர் கலந்து கொண்டனர் .தொடர்ந்து தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் சார்பாக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
குறிப்பாக தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரிய-ஆசிரியைகளை பாதுகாக்க “தனியார் பள்ளி ஆசிரியர்கள் நலவாரியம்” ஒன்றை அமைக்க வேண்டும்.
10 ஆண்டுகள் அங்கீகாரம் பெற்று செயல்படக்கூடிய பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க வேண்டும். இதுநாள் வரை ஆண்டுகணக்கில் வழங்கப்படாத தொடர் அங்கீகாரத்தினை கால தாமதமின்றி உடனே வழங்கிட வேண்டும்.
தனியார் பள்ளிகளை பாதுகாக்க “தனியார் பள்ளிகள் பாதுகாப்பு சட்டத்தை” உடனே இயற்ற வேண்டும். 5ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளை 8ம் வகுப்பு வரை தரம் உயர்த்த வேண்டும். தனியார் பள்ளிகளை ஆய்வு செய்ய அமைக்கப்படுகின்ற குழுக்களில், தனியார் பள்ளி தாளாளர்களை நியமிக்க வேண்டும். 2023ம் ஆண்டுவரை கட்டிய அனைத்து கல்வி நிறுவன கட்டடங்களுக்கு DTCP/LPA உடனடியாக வழங்க வேண்டும்.
தற்போது அரசால் ஒரு சதுர அடிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள தொகையை விட மிகக் குறைந்த தொகையை நிர்ணயம் செய்ய வேண்டும்.
இளம் மழலையர் பள்ளிகளுக்கு DTCP மற்றும் LPA பெறுவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்,கோயில் நிலங்களில் மற்றும் வஃக் போர்டு நிலங்களில் பல பள்ளிகள் செயல்படுவதால் பதிவு செய்யும் குத்தகை காலத்தை 5 ஆண்டுகளாக குறைக்க வேண்டும்.மேலும் DTCP/LPA பெறுவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும், கட்டண நிர்ணயக்குழு நிர்ணயம் செய்யும் தொகையை RTE யில் வழங்குவதோடு அந்தந்த ஆண்டின் இறுதியில் RTE தொகை வழங்குவதை அரசு உறுதி செய்ய வேண்டும். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கான RTE தொகையினை உடனடியாக விடுவிக்க வேண்டும். மாற்று சான்றிதழை (TC) கட்டாயமாக்கப்பட வேண்டும். EIMS நம்பரை பள்ளி அல்லது நிர்வாகத்தின் அனுமதியின்றி எடுப்பதை நிறுத்த வேண்டும்.
உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றினர்.மேலும் கோரிக்கையினை அரசு பரிசீலனை செய்து உடனடியாக நிறைவேற்றித் தரவேண்டும் என்று எங்கள் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் முன்னேற்ற சங்கத்தின் சார்பாக கோரிக்கை விடுத்தனர்.