மதுரையில் நாளை தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில மாநாடு அலை கடலென திரண்டு வாரீர் அனைத்து செட்டியார்கள் பேரவை நிறுவனத் தலைவர் அழைப்பு தேசிய செட்டியார் பேரவை தகவல் தொழில்நுட்ப பிரிவு அணியின் மாநில மாநாடு மதுரை மாநகரில் நாளை 31.08.2025. ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக நடைபெற உள்ளது
இதுகுறித்து தேசிய செட்டியார்கள் பேரவை நிறுவனத் தலைவர் பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. சுமார் 16 ஆண்டுகளுக்கு முன்பு 24 மனை தெலுங்கு செட்டியார்கள் பேரவை தொடங்கப்பட்டு சமுதாய மக்களுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி பல்வேறு வெற்றிகளை கண்டோம் இந்த மாபெரும் வெற்றியை தொடர்ந்து தேசிய செட்டியார்கள் பேரவை இயக்கம் தொடங்கப்பட்டு இந்த இயக்கத்தின் தமிழகத்தில் உள்ள 118 சமூக உட்பிரிவுகள் கொண்ட செட்டியார்களையும் இணைத்து தமிழக முழுவதும் வலுவான கட்டமைப்பை அமைத்துள்ளது தேசிய செட்டியார்கள் பேரவையின் கிளைகள் இல்லாத கிராமங்களே இல்லை என்ற அளவுக்கு மாபெரும் மக்கள் இயக்கமாக செயல்பட்டு வருகிறோம் இந்த நிலையில் அனைத்து சமுதாய மக்களும் அரசியல் அதிகாரங்கள் பெறுவதற்கு புதிய அரசியல் கட்சி விரைவில் தொடங்க உள்ளோம் அதற்கான முன்னேற்பாடு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது
இதன்படி அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன்பு தமிழகம் முழுவதும் 20க்கும் மேற்பட்ட வாகனங்களில் ஓட்டுப்பட்டி வைத்து பொதுமக்களிடையே புதிய அரசியல் கட்சி தொடங்கலாமா வேண்டாமா என்று பொது மக்களிடையே கருத்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது இதன்படி புதிய அரசியல் இயக்கம் தொடங்க விரைவில் அறிவிப்புகள் வரும் இதன் முதல் கட்டமாக தகவல் தொழில்நுட்ப பிரிவு அணியின் மாநில மாநாடு நாளை ஞாயிற்றுக்கிழமை மதுரையில் நடத்தப்படுகிறது
இந்த மாநாட்டில் தமிழக முழுவதும் உள்ள இளைஞர்கள் கலந்து கொண்டு நமது சக்தியை நிலைநாட்ட அனைவரும் அலை கடலென மாநாட்டுக்கு திரண்டு வர வேண்டும் இவ்வாறு அந்த அறிக்கையில் தேசிய செட்டியார்கள் பேரவை நிறுவனத் தலைவர் பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா அறிக்கையில் கூறியுள்ளார்