கந்தர்வகோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்தில் பள்ளி மேலாண்மை குழு தலைவி கலாராணி தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி அனைவரையும் வரவேற்று பேசினார்.
அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ரகமதுல்லா மாணவர்களின் கற்றல், கற்பித்தல் குறித்து பேசினார். முன்னதாக கலைத்திருவிழா கந்தர்வ கோட்டை ஒன்றிய குறுவள மைய அளவில் நடைபெற்ற தொடக்கநிலை மாணவர்களுக்கான போட்டியில் களிமண் பொம்மை செய்தல் போட்டியில் அக்கச்சிப்பட்டி மாணவர் தருண்ராம் முதலிடமும்,மெல்லிசை தனிப்பாடலில் நான்காம் வகுப்பு மாணவி தனுஸ்ரீ முதலிடமும், மழழையர் ஒப்புவித்தல் பாடல் இரண்டாம் வகுப்பு மாணவி மகா ஸ்ரீ மூன்றாம் இடமும், கதை கூறுதல் ஒன்றாம் வகுப்பு மாணவி தருண்ராம் மூன்றாம் இடமும், மாறுவேடப் போட்டியில் ஒன்றாம் வகுப்பு மாணவி தரண்யா இரண்டாம் இடமும், நாட்டுப்புற நடனம் குழுவில் இரண்டாம் இடம், நாட்டுப்புற நடனம் தனி பிரிவில் நான்காம் வகுப்பு தனுஸ்ரீ மாணவி மூன்றாம் இடமும், மாறுவேட போட்டியில் கீர்த்தனா மூன்றாம் வகுப்பு மாணவி இரண்டாம் இடமும் உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் திறன் இயக்கம், போதைப் பொருள் இல்லாத தமிழ்நாடு தொடர்பு விழிப்புணர்வு, போக்குவரத்து பாதுகாவலர் வசதி, இல்லம் தேடிக் கல்வி, பள்ளி தூதுபவர்கள் , அனைத்து குழந்தைகளும் பள்ளியில், மணற்கேணி செயலி,உள்ளடக்கிய கல்வி உள்ளிட்ட கூட்ட பொருட்கள் குறித்து கலந்துரையாடல் செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் ஆசிரியர்கள் மணிமேகலை, சிந்தியா,நிவீன் ஜெம்ம ராகினி சகாய ஹில்டா மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக ஆசிரியர் வெள்ளைச்சாமி நன்றி கூறினார்.