செங்குன்றம் செய்தியாளர்
விநாயகர் சதுர்த்தி நிறைவு விழாவை முன்னிட்டு விநாயகர் சிலைகளை பட்டினப்பாக்கம் கடலில் கரைக்கும் ஊர்வலத்தை மாதவரம் இந்து முன்னணி மாநில நிர்வாகி மனோகரன் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் புழல், கொளத்தூர் , லஷ்மிபுரம், விநாயகபுரம் , புத்தகரம், பகுதிகளில் சுற்றி உள்ள விநாயகர் சிலைகளை லாரிகளில் ஊர்வலமாக எடுத்துச் சென்று அதனை பட்டினப்பாக்கம் கடலில் கரைக்க சென்னை சிவா ,சசிதரன் , சேஷாசலம் ஆகியோரது தலைமையில் 60 க்கு மேற்பட்ட வாகனங்களில் உள்ள விநாயகர்களுக்கு பூஜைகள் நடத்தப்பட்டு கொளத்தூர் ரெட்டேரி பெரம்பூர் செம்பியம் வியாசர்பாடி வழியாக பட்டினப்பாக்கம் கடற்கரைக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.
இதில் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. பாதுகாப்பு பணிக்காக கொளத்தூர் காவல் மாவட்ட துணை ஆணையாளர் குமார் தலைமையில் உதவி ஆணையாளர்கள் சத்யன் , செந்தில்குமார் மற்றும் கொளத்தூர் காவல் மாவட்ட காவல் நிலைய இன்ஸ்பெக்டர்கள் உதவி இன்ஸ்பெக்டர்கள் போலீசார் குவிக்கப்பட்டனர்.