கோவை பாரா மார்ஷியல் ஸ்போர்ட்ஸ் அகாடமி மாணவர்கள் உலக சாதனை
குத்து மற்றும் தடுப்பு கலையை 52 நிமிடங்கள் தொடர்ந்து செய்து ஆஸம் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து அசத்தல்
சமூக வலை தளங்களால் பள்ளி மாணவ,மாணவிகளுக்கு ஏற்படும் பதிப்புகள் மற்றும் போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கோவையில் கராத்தே பயிலும் மாணவர்கள் உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டனர்..
கோவை சுண்டக்காமுத்தூர் பகுதியில் பாரா மார்ஷியல் ஸ்போர்ட்ஸ் அகாடமியை சேர்ந்த நூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் இணைந்து கராத்தே கலையின் ஒரு பகுதியான (Punch And Block) குத்து மற்றும் தடுப்பு ஆகியவற்றை தொடர்ந்து 52 நிமிடங்கள் செய்து ஆஸம் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனர்..
கராத்தே பயிற்சியாளரும்,தேசிய நடுவருமான செந்தில் குமார் பரமேஸ்வரன் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இதில்,நான்கு வயது முதல் கல்லூரி பயிலும் மாணவ,மாணவிகள் இணைந்து சாதனையை செய்து கவனம் ஈர்த்துள்ளனர்…
தொடர்ந்து சாதனை செய்த மாணவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் விழா நடைபெற்றது இதில் பிரபல ஜிம் பயிற்சியாளர் பாண்டி, ராமமூர்த்தி , ராம சுந்தர்ராஜன், லட்சுமணன் சுந்தர்ராஜன், பாலகிருஷ்ணன், திவ்யா சிவகுமார்,சத்தி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்..
முன்னதாக இது குறித்து பேசிய கராத்தே பயிற்சியாளர் செந்தில், கராத்தே செய்வதன் மூலம் பெறும் உடல் ஆரோக்கியம் மனவலிமை மற்றும் சமூக வலை தளங்களால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து விடுபட இன்றைய தலைமுறை மாணவர்கள் கராத்தே போன்ற விளையாட்டுகளை கற்றுக்கொள்வதன் அவசியம் குறித்தும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த சாதனை நிகழ்வை நடத்தியதாக தெரிவித்தார்..