அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே குறவன்குளம் கிராமத்தில் வடக்கு தெருவில் அமைந்திருக்கும் தேவேந்திர குல வேளாளர் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீகாளியம்மன், விநாயகர், முருகன், கருப்பண்ணசாமி கோவில்களின் மஹா கும்பாபிஷேக விழா கடந்த மாதம் நடைபெற்றது.
இதை தொடர்ந்து 48 வது நாள் மண்டல பூஜை விழா நடந்தது. இதில் யாக சாலையில் இருந்து வேத மந்திரங்கள் முழங்க சுவாமிகளுக்கு அர்ச்சனைகளும் 16 வகையான திரவியங்களால் அபிஷேகமும் நடந்தது.
இதில் சுற்று வட்டாரங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த விழா ஏற்பாடுகளை குறவன்குளம் தேவேந்திரகுல உறவின்முறை சங்கம் வடக்கு தெரு கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.