துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள வெங்கடாசலபுரத்தில் உள்ள ஆர்.எஸ்.கே. பன்னாட்டுப் பள்ளியில் 29/08/2025 அன்று செந்தமிழ் கலை இலக்கிய மன்றத் தொடக்கவிழா நடைபெற்றது. இவ்விழாவில் பள்ளியின் நிறுவனரும் தாளாளருமான இரா.கார்த்திகேயன் அவர்களின் அறிவுறுத்தலின்படி, பள்ளியின் கல்விசார் இயக்குனர் முனைவர்.இரவிச்சந்திரன் தலைமையுரை ஆற்றினார். பள்ளியின் முதல்வர் பானுமதி வாழ்த்துரை வழங்கினார்.
சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு அரசின் தமிழ்ச்செம்மல் விருது பெற்ற இராச.இளங்கோவன் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்.இதில் மன்றத்தின் தலைவராக 8-ஆம் வகுப்பு மாணவர் பிரஜித் மற்றும் செயலாளராக 5-ஆம் வகுப்பு மாணவி மோகனா சந்திரசேகரன் ஆகியோர் புதிதாக பொறுப்பேற்றனர்.
அவர்களுக்கு பள்ளியைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்துத் தெரிவித்தனர். 8-ஆம் வகுப்பு மாணவி தன்யஸ்ரீ அவர்கள் வரவேற்றும், 9-ஆம் வகுப்பு மாணவி ஹேமமாலினி நன்றியும் கூறினார். நிகழ்ச்சியை 9-ஆம் வகுப்பு மாணவி ரேஷிகா மற்றும் 6-ஆம் வகுப்பு மாணவி பிரதிக்ஷாஸ்ரீ ஆகியோர் தொகுத்து வழங்கினர். இவ்விழாவில் அனைத்து ஆசிரியர்களும், அலுவலகப்பணியாளர்களும், மாணவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளி தமிழ்த்துறையைச் சேர்ந்த ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்