கோவை கருமத்தம்பட்டி – அன்னூர் சாலையில் உள்ள நல்ல கவுண்டன் பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள பிரபஞ்ச அமைதி சேவாஸ்ரமத்தின் 26வது ஆண்டு நிறுவனர் தின விழா ஆசிரம வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியை அரசு அலுவலர்கள், நன்கொடையாளர்கள்,பிரபஞ்ச அமைதி ஆசிரமத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர் குருஜி ஷிவாத்மா குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து குருஜி ஷிவாத்மா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ஆசிரமத்தின் வளர்ச்சி என்னவென்றால் பிரபஞ்சம் முழுவதும், உணவுக்காக, கல்விக்காக, உடைக்காக, தங்குவதற்காக, மருந்திற்காக கஷ்டப்படுகிறார்களோ அவர்களுக்கு உதவி செய்வதே எங்களது நோக்கம் வளர்ச்சி. இந்த உதவி செய்யும் நோக்கத்தை பல மாவட்டங்களுக்கு கொண்டு செல்ல இருக்கிறோம்.

இதுபோன்று உதவி செய்யும் நல்ல உள்ளங்கள் இருந்தால் எங்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் பகுதியிலேயே உங்கள் தலைமையின் கீழ் இந்த சேவைகளை செய்ய தயாராக இருக்கிறோம். மேலும், பல வகையிலும் உதவி செய்து வரும் அரசாங்கத்திற்கு நன்றி கூறுகிறோம். சர்வதேச அளவில்
மனித உரிமை கழகம் எங்களது சேவைகளை கண்டறிந்து,

மக்கள் சேவை செய்ய சர்வ மதங்களையும் நினைத்து சர்வ சமய கூட்டமைப்பு நிறுவுவதற்கு வாய்ப்பு கொடுத்துள்ளது. அதேபோல மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு, திருநங்கைகள் கூட்டமைப்பு, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மழைவாழ் மக்கள் கூட்டமைப்பு இதுபோன்ற அனைத்து தன்னார்வு தொண்டு நிறுவனங்களையும் இணைக்கும் கூட்டமைப்பு மூலமாக சர்வ தேசத்திற்கும் உதவும் வாய்ப்பை எங்களுக்கு தந்துள்ளார்கள் என்றார்.

தமிழகம் முழுவதும் 25 மாவட்டங்களில் இலவச காப்பகங்களை நிறுவி, ஆதரவற்ற ஏழைகள், தாய் தந்தையற்ற குழந்தைகள், கைவிடப்பட்ட பெண்கள், பெற்றோர்கள், முதியோர்கள், மனநலம் குன்றியவர்கள், மன நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவசமாக அனைத்து சேவைகளும் செய்து வருகின்றோம்.
உலகம் முழுவதும் இலவச சேவை மையங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது.
உலகெங்கும் உள்ள ஆதரவற்றோர்,

ஏழை, எளிய மக்களுக்கு உணவு, உடை, உறைவிடம் கல்வி, மருத்துவம் ஆகியவற்றை வழங்கி வருகிறோம். நன்கொடையாளர்கள் மூலம் இந்த சேவைகளை மக்களுக்கு அளித்து வருகிறோம் என்றார். முன்னதாக நன்கொடையாளர்கள் குடும்ப நலம், தொழில் வளம் வேண்டி குடும்ப உலக நல வேள்வி நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, பரதநாட்டியம், நடனம், இசைக் கச்சேரி உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் நன்கொடையாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *