கோவையில் லாரல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஒருங்கிணைப்பில் நடைபெற்ற புறநகர் குறுமைய விளையாட்டு போட்டியில்,அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு
தமிழகம் முழுவதும் பள்ளி கல்வித்துறை சார்பாக 66 வது குடியரசு தின விளையாட்டு மற்றும் தடகள போட்டிகள் நடைபெற்று வருகிறது..
இதன் ஒரு பகுதியாக கோவையில் மண்டல அளவிலான புறநகர் குறுமைய விளையாட்டு போட்டிகள் கோவை நேரு ஸ்டேடிய வளாகத்தில் நடைபெற்றது…
கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள லாரல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஒருங்கிணைத்து நடத்திய இதில்,கோவை புறநகர் பகுதிக்கு உட்பட்ட சுமார் 40 க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்…
முன்னதாக போட்டிகளின் துவக்க விழா பள்ளியின் தாளாளர் ஃபிராங்க் டேவிட் மற்றும் இயக்குனர் அபிஷேக் பால் ஜாக்ஸன் தலைமையில் நடைபெற்றது..
இதில் சிறப்பு விருந்தினர்களாக பள்ளியின் முன்னாள் மாணவரும் சியாந்தரா குழுமங்களின் தலைவர் வெங்கடேஷ்வரன் மற்றும் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் குமரேசன் ஆகியோர் கலந்து கொண்டு போட்டிகளை துவக்கி வைத்தனர்..
இரண்டு நாட்கள் நடைபெற உள்ள போட்டிகளில்,14,17,19 வயதுக்கு உட்பட்ட பிரிவுகளில் கைப்பந்து,கால்பந்து,கூடைப்பந்து,டேபிள் டென்னிஸ்,போன்ற விளையாட்டு போட்டிகளும், ஓட்டப்பந்தயம், நீளம் மற்றும் உயரம் தாண்டுதல்,குண்டு எறிதல், உள்ளிட்ட தடகள போட்டிகளும் நடைபெற்றன இதில் தேர்வு செய்யப்படும் வீரர்,வீராங்கனைகள் மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட இருப்பதாக போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்…