எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
சீர்காழி அருகே வானகிரி கிராமத்தில் சுருக்குமடி வலை இரட்டை மடி வலை அதிவேக திறன் கொண்ட இன்ஜின்களை பயன்படுத்தி கடலில் மீன் பிடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் 500-க்கும் மேற்பட்டோர் கையில் கருப்புக்கொடி ஏந்தி கடலில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
தமிழகத்தில் சுருக்குமடி வலை, ரெட்டை மடி வலை , அதிவேக திறன் கொண்ட எந்திரங்களை பயன்படுத்தி கடலில் மீன் பிடிப்பதால் கடலில் மீன்வளம் அழிந்து வருவதாகவும், சிறு தொழில் மீனவர்கள் வாழ்வாதாரம் இதனால் பாதிக்கப்படுவதாகவும் கூறி கடந்த பல வருடங்களாக வானகிரி, தொடுவாய், திருமுல்லைவாசல், கீழமூவக்கரை, உள்ளிட்ட 26 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் போராடி வருகின்றனர். இது தொடர்பாக கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது
பேச்சுவார்த்தையில் பூம்புகார் ,சந்திரபாடி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் மட்டுமே சுருக்கு மடிவளைகளை பயன்படுத்தி மீன் பிடித்து வருவதாகவும் மீதமுள்ள 26 மீனவ கிராமங்கள் சேர்ந்தவர்கள். இதனால் பாதிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டினர். எனவே சுருக்குமடி வேலைகளை தடை செய்ய வேண்டும் என கூறினார் இந்நிலையில் அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டாமல் 26 கிராம மீனவர்கள் வெளிநடப்பு செய்தனர்.
இந்நிலையில் மீண்டும் சுருக்கு மடி வலைகளை பயன்படுத்தி மீனவர்கள் மீன் பிடித்து வருவதை கண்டித்தும் இரட்டை மடிவலை சுருக்கு மடிவலை அதிவேக திறன் கொண்ட இன்ஜின்களை பயன்படுத்தி கடலில் மீன் பிடிப்பதற்கு முற்றிலும் தடை விதிக்க வேண்டும். மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தை அனைத்து கிராமங்களிலும் கடைபிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி 26 மீனவ கிராமங்களைச் சேர்ந்தவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்தம் செய்தனர்.
சீர்காழி தாலுக்கா தலைமை கிராமமாக உள்ள வானகிரி கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள், பைபர் படகுகளில் கருப்புக் கொடி கட்டி கடலில் நிறுத்தியும், கையில் கருப்பு குடி ஏந்தி கடலில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.