நீர் மேலாண்மையை முன்னிட்டு பனை மரம் வளர்ப்பு
மதுரை கிழக்கு பூண்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி யில், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் மற்றும் மாணவர்கள் ஆசிரியர்கள் இணைந்து இயற்கை ஆர்வலர் பாரதிதாசன் வழிகாட்டலில் சுமார் 100 பனை விதை களை பூண்டி கண்மாய் கரையில் நடவு செய்தனர்.

பனம் பழம் கிடைக்கும் காலம் துவங்கியது முதல் பனம் பழத்தின் மூலம் பனங்கிழங்கு எடுக்கும் ஒரு சிறிய விவசாய முயற்சி.பனை விதைகளை தூக்கி வீசப்பட்ட நெகிழி குடுவை களில் ஆற்று மணல் இட்டு பனை விதை களை விதைத்து வைத்து 120 நாட்கள் கழித்து தைத் திருநாளை முன்னிட்டு அறுவடை செய்ய உள்ளனர்.

இதன் முதல் நிகழ்வாக பனை விதையினை நடவு செய்த நிகழ்வில் தலைமை ஆசிரியை எம். ஜீவா.உதவி ஆசிரியை சகாய அமல ராணி இயற்கை ஆர்வலர் பாரதிதாசன், பள்ளி மாணவர்கள் மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் மற்றும் மாணவர்கள் ஆசிரியர்கள் இணைந்து கரங்களினால் நடவு செய்து மகிழ்வடைந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *