காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வெங்காடு பகுதியில் கார் உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யும் கெஸ்டாம்ப் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது.
இந்த தொழிற்சாலையின் சமூக பொறுப்புனர்வு திட்டத்தின் கீழ், குழந்தைகள் நம்பிக்கை அறக்கட்டளையுடன் இணைந்து, வெங்காடு கிராமத்தில் உள்ள வெங்கட்ராம ஐயர் குடிநீர் குளம் சீரமைக்க ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதை தொடர்ந்து, குளம் சீரமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா செவ்வாய்கிழமை நடைபெற்றது.
கெஸ்டாம்ப் தொழிற்சாலையின் இயக்குநர் பிரபாகர் ராமமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், வெங்காடு ஊராட்சிமன்ற தலைவர் அன்னக்கிளி உலகநாதன், வெங்காடு ஏரிநீர் பாசன சங்க தலைவர் உலகநாதன் ஆகியோர் குளம் சீரமைப்பு பணியை அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில், கெஸ்டாம்ப் நிறுவனத்தின் செயல்பாட்டுத்தலைவர் நந்தகுமார், மனிதவளத்துறை தலைவர் சரவணகுமார், ஊராட்சிமன்ற துணைசெயலாளர் தமிழ்செல்வி ரவிசந்சிரன், ஊராட்சி செயலர் ராஜீ, ஊராட்சிமன்ற உறுப்பினர்கள், கிராம பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்.