திருவாரூர் மாவட்டத்தில் டெல்டா மாவட்டங்களில் ஜனவரி மாதம் வரை பருவமழை கடந்த சில ஆண்டுகளாக நீடித்தது வரும் நிலையில் விவசாயிகள் சம்பா பட்டத்தில் நீண்ட கால நெல் ரகத்தினை தேர்வு செய்வதில் ஆர்வம். தமிழகத்தில் கடந்த 5 வருடங்களாக ஜனவரி மாதம் வரை தொடர்ந்து பெய்யும் பருவமழை ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் பெய்யும் குளிர்கால கனமழை காரணமாக அறுவடைக்கு தயாரான பயிர்கள் பாதிப்படையும் நிலை தொடர் கதையாக மாறியுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர், நவம்பர், டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் இயல்பிற்கு அதிகமாக பதிவாக கூடும் என்றும் பருவமழை இயல்பான தேதியில் துவங்கினாலும், பிற்பகுதியில் தீவிரமடையும் என்றும் வடகிழக்கு பருவமழை ஜனவரி மாதம் வரை நீடித்து மழையை கொடுக்கும் என கூறப்படுகிறது.

இயல்பிற்கு அதிக மழை, பருவமழை நீடிப்பு, குளிர்கால மழை இத்தகைய சூழலில் நீண்ட கால நெல் ரகத்திற்கு செல்வது சிறந்தது என விவசாயிகள் கருதி நடப்பட்டதில் குறிப்பாக ADT – 51, CR -1009, CR-SUB -1009 போன்ற நெல் ரகங்களை தேர்வு செய்கின்றனர்.ADT -51, CR -SUB -1009 போன்ற நெல் ரகங்களை தேர்ந்தெடுக்கும் விவசாயிகள் தழைச்சத்தை ( யூரியா) குறைவாக கொடுக்க வேண்டியது அவசியம் என்றும், ஜனவரி மாத மழையை கருத்தில் கொண்டு தழைச்சத்தை (யூரியா) குறைவாக அளிப்பது, மெசின் நடவு மேற்கொண்டு அதிக தூர் வெடிப்பதை உறுதி செய்வதால் சாய்வதை சமாளிக்க முடியும் என்றும், மேலும் தாளடி பட்ட விவசாயிகள் நடுத்தர நெல் ரகங்களை தேர்வு செய்து, அறுவடை பணிகளை மாசி மாதத்தில் திட்டமிடல் அவசியமாகும் என ஆலோசனைகளை வேளாண்மை துறை நிர்வகி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *