மாவட்ட செய்தியாளர் முகம்மது இப்ராஹிம்
தென்காசி
தென்காசி மாவட்டம் வல்லம் ஜமீன் பஞ்சாயத்தில் அமைந்துள்ள வி .எம் . ஜே.திருமண மஹாலில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ கே கமல் கிஷோர் தலைமையில் துவக்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பொதுமக்களின் மனுக்கள் பெறப்பட்டு உடனுக்குடன் தீர்வு காணப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஜமீன் பஞ்சாயத்து தலைவி ஜமீன் பாத்திமா ஷேக் தாவவூது குத்து விளக்கினை ஏற்றி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் தென்காசி மேற்கு ஒன்றிய செயலாளர் வல்லம் திவான் ஒலி தென்காசி ஒன்றிய குழு தலைவர் ஷேக் அப்துல்லா ஆகியோர் முன்னிலையில் முகாம் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை வட்டார வளர்ச்சி அலுவலர் மாரியப்பன் நிர்வாக வட்டார வளர்ச்சி அலுவலர் பார்வதி ஒன்றிய கவுன்சிலர் மல்லிகா ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் சுந்தரி சையத் அலி பாத்திமா சங்கீதா செல்வி சாகுல் ஹமீது திவான் மைதீன் இசக்கி அம்மாள் முபாரக் அலி வளர்ச்சி செயலாளர் சங்கரநாராயணன் துணைத் தலைவர் முருகேசன் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். பொதுமக்களின் கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் பெறப்பட்டு உடனுக்குடன் அதற்கான தீர்வுகள் ஏற்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த முகாமில் சுமார் 2000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.