கோயம்புத்தூரில் இயங்கி வரும் எஸ். எஸ். வி. எம். கல்வி குழுமம் ஆண்டுதோறும் இந்தியா முழுவதும் சிறந்து விளங்கும் 20 ஆசிரியர்களை தேர்வு செய்து உத்வேக குரு என்ற விருதினை வழங்கி கௌரவித்து வருகிறது
அதேபோல இந்த ஆண்டு செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் மூன்றாம் தேதி வரை டிரான்ஸ் ஃபாமிங் கன்க்ளேவ் இந்தியா – ஏ.எல்.ஹுயூமானிட்டி என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது இந்த கருத்தரங்கில் பல்வேறு பள்ளியை சேர்ந்த மாணவர்கள் தங்களது தனி திறமையை வெளிக்கொணர்ந்தனர். இந்தியா முழுவதிலிருந்து தேர்வு செய்யப்பட்ட சுமார் 18 ஆசிரியர்களும் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.
இதில் வால்பாறையில் கணித ஆசிரியராக பணிபுரிந்து வரும் வசந்தகுமாரை தேர்வு செய்து உத்வேக குரு என்ற விருதினை கூகுள் கல்விக் குழுமத்தின் தலைவர் சஞ்சய் ஜெயின் மற்றும் எஸ்.எஸ்.பி.எம்.கல்விக் குழுமங்களின் தலைவர் மணிமேகலை ஆகியோர் இணைந்து வழங்கி சிறப்பித்தனர் இந்நிலையில் உத்வேக குரு விருதை பெற்ற கணித ஆசிரியருக்கு ஆசிரிய பெருமக்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்