செங்காட்டுப்பட்டியில்-வரதராஜபுரம்,வண்ணாடு ஊராட்சிகளுக்கு”உங்களுடன் ஸ்டாலின்” முகாம்
துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள செங்காட்டுப்பட்டி வரதராஜபுரம் தனியார் திருமண மண்டபத்தில் வரதராஜபுரம் ,வண்ணாடு ஆகிய ஊராட்சிகளுக்கு செப்டம்பர் 3ந் தேதி “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் நடைபெற்றது. இம்முகாமை முன்னாள் மாவட்ட சேர்மன் தர்மன் ராஜேந்திரன் துவக்கி வைத்தார்.
இதனை தொடர்ந்து எம்எல்ஏ ஸ்டாலின்குமார் பயனாளிகளுக்கு பட்டா வழங்கினார்.இம்முகாமில் வரதராஜபுரம் (செங்காட்டுப்பட்டி) வண்ணாடு ஆகிய ஊராட்சியில் உள்ள கிராம மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.இதில் 15 அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இம்முகாமில் துறையூர் வட்டாட்சியர் சிவகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாந்தி, ரவிச்சந்திரன், முன்னாள் ஒன்றிய சேர்மன் சரண்யா மோகன்தாஸ், ம.ஒ.செயலாளர் அண்ணாதுரை, விவசாய அணி மாவட்ட அமைப்பாளர் செங்கை செல்லமுத்து,கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அணி மாவட்ட துணை அமைப்பாளர் செங்கை செந்தில்,மாவட்ட பிரதிநிதி பெரியசாமி கிளைச் செயலாளர் ராம்ராஜ்,
தலைமையிடத்து துணை வட்டாட்சியர் ஐயப்பன், மண்டல துணை வட்டாட்சியர் கோவிந்தராஜ், வருவாய் ஆய்வாளர்கள் இளவரசி, ஆரம்ப சுகாதார அலுவலர் செந்தில்குமார்,ஊராட்சி செயலர்கள் வரதராஜபுரம், கண்ணதாசன், வண்ணாடு பாஸ்கர், வேங்கடத்தானூர் மாலதி,சேனப்பநல்லூர் சங்கீதா, மருவத்தூர் செல்வராசு,கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்