தமிழகத்திலேயே தூத்துக்குடி மாநகராட்சி பல்வேறு வகையில் வசதிகள் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் தமிழக முதலமைச்சர் உத்தரவின் பெயரில் உள்ளாட்சி துறை அமைச்சர் கே என் நேரு ஆலோசனையின்படி தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உத்தரவின் பேரில் மாநகரில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது
செப்டம்பர் மாதம் இறுதியில் அக்டோபர் மாதம் தொடக்கத்தில் பருவ மழை தொடங்கும் அதனை முன்னிட்டு தூத்துக்குடி மாநகரில் மக்கள் எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாமல் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது
அதன்படி மாநகராட்சி அரங்கத்தில் வைத்து மாநகராட்சி மேயர் ஜெகன் தலைமையில் மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா முன்னிலையில் மாநகராட்சியில் பணிகளை செய்து வரும் காண்ட்ராக்ட் காரர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது
இந்த ஆலோசனையில் மாநகராட்சியில் பணிகளை செய்து வரும் இருபதுக்கு மேற்பட்ட ஒப்பந்தக்காரர்கள் கலந்து கொண்டனர் ஒப்பந்தக்காரர் மத்தியில் மாநகராட்சி மேயர் ஜெகன் பேசுகையில் செப்டம்பர் மாதம் இறுதியில் மழைக்காலம் தொடங்கி விடும் தசரா விடுமுறை பத்து நாட்கள் நடைபெறும் ஆகையால் மாநகராட்சியில் பணிகளை எடுத்து ஒப்பந்தக்காரர்கள் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் மக்கள் எந்த வகையிலும் பாதிக்காத வகையில் இருக்க வேண்டும் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது
அதன்படி மாநகராட்சியில் பணிகளை எடுத்த ஒப்பந்தக்காரர்கள் உடனடியாக பணிகளை முடிக்க வேண்டும் அதற்கான காலக்கடுகளை ஒவ்வொரு ஒப்பந்தக்காரர்களும் கூற வேண்டும் என்று மாநகராட்சி மேயர் ஜெகன் ஒப்பந்தக்காரர்கள் மத்தியில் பேசினார் அப்போது ஒவ்வொரு ஒப்பந்தக்காரர்களும் தங்களுக்கு எவ்வளவு பணிகள் கொடுக்கப்பட்டுள்ளது எவ்வளவு பணிகள் முடிக்கப்பட்டுள்ளது என்ற விபரங்களை ஒப்பந்தக்காரர்கள் கூறினார்கள் அப்போது மாநகராட்சி மேய ஜெகன் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பணிகளை எந்த தேதிக்குள் முடிப்பீர்கள் என்று உறுதியாக இந்த இடத்தில் கூற வேண்டும் என்று மேயர் ஜெகன் ஒப்பந்தக்காரர்களிடம் கூறினார்
அப்போது ஒவ்வொரு ஒப்பந்ததாரர்களும் தங்கள் பணிகள் முடியும் தேதிகளை தெரிவித்தனர் அந்தப் பணிகளையும் உடனடியாக அதற்கு முன்பாக முடிக்க வேண்டும் என்று மாநகராட்சி மேயர் ஜெகன் ஒப்பந்ததாரரிடம் தெரிவித்தார் அப்போது மேயர் ஜெகன் ஒரு ஒப்பந்ததாரரிடம் குளம் பணியை உடனடியாக தொடங்க வேண்டும் மழைக்காலத்துக்கு முன்பு பணிகளை தொடங்கி முடிக்க வேண்டும் என்று ஒப்பந்தக்காரரிடம் கூறினார்
அதற்கு ஒப்பந்தக்காரர் தற்போது அந்த குளத்தில் தண்ணீர் உள்ளது உடனடியாக அதற்கு மேயர் ஜெகன் பணிகளை நீங்கள் துவக்க வேண்டும் இப்போது நீங்கள் பணிகளை ஆரம்பித்தால் தான் மழை துவங்குவதற்கு முன்பு பணிகள் முடியும் என்று ஒப்பனக்காரரிடம் மாநகராட்சி மேயர் ஜெகன் கூறினார் மாநகராட்சியில் மொத்தம் 900 பணிகள் அதில் 300 பணிகள் முடிவடைந்து உள்ளது600 பணிகள் நடைபெற்று வருகிறது
அதில் சாலைகள் மழை நீர் கால்வாய் பூங்காக்கள் 4 குளம். பல கட்டிடங்கள் பணிகள் நடைபெற்று வருகிறது இந்தப் பணிகள் எல்லாம் மழை காலத்துக்கு முன்பு முடிக்க வேண்டும் என்று மாநகராட்சி நிர்வாகம் ஒப்பந்தக்காரருக்கு கட்டளையிட்டுள்ளது இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாநகராட்சி பொறியாளர் தமிழ்ச்செல்வன் மாநகராட்சி துணைப் பொறியாளர் சரவணன் உதவி ஆணையர் கல்யாண சுந்தரம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ஒப்பந்தக்காரர்கள் கலந்து கொண்டனர்