மீத்தேன் வாயு எதிர்ப்பு போராட்டம்
இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் திருப்புல்லாணி வருவாய் கிராமங்களில் மீத்தேன் ஹைட்ரோகார்பன் எரிவாயு எடுப்பதற்காக விவசாய நிலங்களை பாழ்படுத்தும் விதமாக இப்பகுதி மக்களுக்கு எந்தவொரு முன்னறிவிப்பு கொடுக்காமலும், ஆய்வு பணிகள் குறித்த எவ்வித அறிவிப்பு பலகை வைக்காமலும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் இந்த பணிகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி காலை 11 மணியளவில் மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் சிபிஐஎம்எல் மாஸ் லைன் மாநில செயலாளர் யோகேஸ்வரன் தலைமையில், பெரியார் பேரவை தலைவர் நாகேஸ்வரன், ஆதித்தமிழர் கட்சியின் தென் மண்டல செயலாளர் பாஸ்கரன், தமிழக வாழ்வுரிமை கட்சி மாநில கொள்கை பரப்பு செயலாளர் பிரபாகரன், மக்கள் அதிகாரம் மாவட்ட செயலாளர் ஆனந்தன், மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் செய்யது இப்ராஹீம், ஆதித்தமிழர் கட்சியின் ஊடகப் பிரிவு செயலாளர் அறிவரசு ஆகியோர் மேற்கொண்ட கள ஆய்வில் கலந்த கொண்டு உடனே ஆய்வு பணிகளை நிறுத்தி வெளியேற கண்டன கோசமிட்டு போராட்டம் நடத்தினார்கள்.
இதை தொடர்ந்து திருப்புல்லாணி காவல் சார்பு ஆய்வாளர் அவர்கள் தலைமையில் வந்த காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள் அப்போது மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டதாவது இந்த பணிகளை உடனடியாக நிறுத்தி இந்த உபகரணங்களை எடுத்து வெளியேற வேண்டும் இல்லையேல் சாலை மறியல் போராட்டம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம் நடைபெறும் என்றதால் தற்காலிகமாக மேற்கண்ட பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது.