தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உடல் உறுப்பு தான உறுதிமொழி ஏற்பு
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடைபெற்ற உடல் உறுப்பு தானம் பதிவு செய்தல் மற்றும் விழிப்புணர்வு முகாமில் மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தலைமையில் உடல் உறுப்பு தானம் பதிவு விழிப்புணர்வு உறுதி மொழியினை அரச அலுவலர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் எடுத்துக் கொண்டனர் .
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பேசியது உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு நிகழ்வுகள் தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது ஆனால் தமிழகத்தில் முதன் முறையாக அரசுத்துறையின் சார்பில் உடல் உறுப்பு தானம் பதிவு செய்தல் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடத்துவதற்கு தேனி மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
மிகவும் பாராட்டுக்குரியது நாம் பொதுமக்களுக்கு பல வழிகளில் சமூக சேவைகள் செய்யலாம் ஆனால் உடல் உறுப்பு தானம் செய்வது உங்களின் மிகச்சிறந்த சேவையாக மதிக்கப்படும் உடல் உறுப்பு மற்றும் அறுவை சிகிச்சைக்காக ஏராளமானோர் காத்துக் கொண்டு உள்ளார்கள்
இதயம் கல்லீரல் சிறுநீரகம் கண் நுரையீரல் தோல் போன்றவற்றை தேவையானர்களுக்கு தானமாக வழங்கலாம். மேலும் உடல் உறுப்பு தானம் செய்வதற்கு முறையாக பதிவு செய்ய வேண்டும் மாணவர்கள் தான் எதிர்கால சமூகத்தை வழிநடத்த போகிறார்கள்
இந்த முகாமில் கலந்து கொண்டுள்ள கல்லூரி மாணவர்கள் உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வை தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் நண்பர்களுக்கும் தங்கள் பகுதியில் உள்ள பிற மக்களுக்கும் எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் குறிப்பாக ஒரு செய்தியை அனைத்து பொது மக்களிடமும் கொண்டு சேர்ப்பதில் பத்திரிக்கைத் துறையின் பங்கு இன்றியமையாததாகும் இந்த வகையில் இன்றைய தினம் இந்த முகாமில் கலந்து கொண்டுள்ள பத்திரிகை ஊடக நண்பர்கள் உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு செய்தியினை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.
இது போன்றதொரு சிறப்பான முகாமினை ஏற்பாடு செய்த அலுவலர்களுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வை அனைவருக்கும் ஏற்படுத்துவதற்காக இனிவரும் காலங்களில் இந்த முகாமினை பல்வேறு இடங்களில் நடத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் இவ்வாறு மாவட்ட கலெக்டர் பேசினார்.
இதனைத் தொடர்ந்து உடல் உறுப்பு தானம் விழிப்புணர்வு உறுதிமொழியினை மாவட்ட கலெக்டர் தலைமையில் அலுவலர்கள் மாணவர்கள் பொதுமக்கள் பத்திரிகையாளர்கள் என்று அனைவரும் ஏற்றுக் கொண்டார்கள் பின்னர் உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட கலெக்டர் கையெழுத்திட்டு தூக்கி வைத்தார் இந்த முகாமில் சுமார் 400க்கும் மேற்பட்டோர் உடல் உறுப்புகள் தானம் செய்வதாக பதிவு செய்துள்ளனர்
பதிவு செய்தவர்களுக்கு இணையதள சான்றிதழினை மாவட்ட கலெக்டர் வழங்கினார் இந்த முகாமில். தேனி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மரு. முத்துசித்ரா இணை இயக்குனர் மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் மரு. கலைச்செல்வி மாவட்ட சுகாதார அலுவலர் மரு. ஜவஹர்லால் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பொது முத்து மாதவன் உதவி இயக்குனர் நில அளவை அப்பாஸ் முன்னோடி வங்கி மேலாளர் விஜய சேகர் கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் இயக்குனர் ரவிக்குமார் உறுப்பு தான ஒருங்கிணைப்பாளர் திலிப் மற்றும் கல்லூரி மாணவர்கள் பொதுமக்கள் பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் .