கரூர் செய்தியாளர் மரியான் பாபு
கரூரில் கப்பலோட்டிய தமிழர் வ உ சிதம்பரம் பிள்ளையின் 154வது பிறந்தநாள் விழா பல்வேறு அமைப்புகள் மாலை அணிவித்தனர்.
கரூர் மாவட்டம் தாந்தோணி மலை பகுதியில் கப்பலோட்டிய தமிழர்,தேச தலைவர் வ. உ. சிதம்பரம் பிள்ளையின் திருஉருவ சிலைக்கு பல்வேறு அமைப்புகள் மாலை அணிவித்து உறுதிமொழி ஏற்றனர்.
கரூர் மாவட்ட சோழிய வெள்ளாளர் நலச்சங்கம்,மாவட்டத் தலைவர் சிவசாமி, கரூர் மாவட்ட வ உ சி பேரவை, மாவட்டத் தலைவர் மணிஸ் (எ)மகேஸ்வரன் நாம் தமிழர் கட்சி, மாவட்டத் தலைவர் நன்மாறன் தமிழ்நாடு சோழிய வெள்ளாளர் சங்க மாநில செய்தி தொடர்பாளர் ஏ.வி.எம் சரவணன் கலந்து கொண்டனர்.
பல்வேறு தீர்மானங்கள் தெரிவித்தனர் தமிழக அரசு வ உ சிதம்பரம் பிள்ளையின் பிறந்த தினத்தை அரசு விழாவும் வழக்கறிஞர் தினமாகும் அறிவிக்க வேண்டும்.
சமீபகாலமாக தமிழக அரசு விழாக்களில் வ உ சிதம்பரர்களை என்று மட்டுமே பதிவு செய்யப்படுகிறது அதனை தவிர்த்து வ உ சிதம்பரம் பிள்ளை என அவரது முழு பெயரை அரசு விழாக்கள் பதிவிட வேண்டும் .
கரூர் மாவட்டத்தில் வெள்ளாளர்கள் அதிக வாக்காளர் கொண்ட கிருஷ்ணராயபுரம் தனித் தொகுதியை பொதுத் தொகுதியை அறிவிக்க வேண்டுகிறோம்.
தமிழக மற்றும் மத்திய அரசுக்கு வ உ சி பேரவை சார்பாக ஐயா வின் பிறந்த தினத்தில் மேற்கூறிய கோரிக்கையில் நிறைவேற்றும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் என்று மாவட்ட தலைவர் மகேஸ்வரன் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் நூற்றுக்கு மேற்பட்டோர் பல்வேறு அமைப்புகள் சார்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.