கரூர் செய்தியாளர் மரியான் பாபு
கப்பலோட்டிய தமிழர் வ. உ. சிதம்பரம் பிள்ளையின் 154 வது பிறந்தநாள் விழா..
வ.உ.சி யின் திருவுருவப் படத்திற்கு தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
வ.உ.சிதம்பரனாரின் பிறந்தநாளில் ஐனநாயகம், சுதந்திர மக்களாட்சியை காக்கவும்,
தமிழ் இனத்தின் உரிமைக்காவும் தொடர்ந்து களமாடுவோம் என உறுதி ஏற்போம்.
அய்யாவின் தியாகத்தை போற்றி வணங்குவோம் என உறுதி மொழி ஏற்றனர்.
பின்னர் கரூர் பஸ் நிலையம் ரவுண்டானா அருகில் அமைக்கப்பட்டிருந்த கப்பலோட்டிய தமிழர் வ. உ.சிதம்பரம் பிள்ளையின் திருவுருவப்படத்திற்கு கரூர் மாவட்ட தமிழ்நாடு கொங்கு இளைஞர்பேரவை சார்பில் மாவட்ட செயலாளர் அருள் குமார் தலைமையில் மலர் தூவி புகழலாஞ்சலி செலுத்தினர்.
உடன் மாணவரணி மாவட்ட அமைப்பாளர் சுஜித், மாவட்ட இணை அமைப்பாளர் இனியன், தாந்தோணி ஒன்றிய அமைப்பாளர் அமுதவேல் மற்றும் கரூர் மாவட்ட தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.