இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி திருவாரூர் மாவட்ட கிளை நிர்வாக குழு கூட்டம்..

இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி திருவாரூர் மாவட்டகிளை நிர்வாக குழுக்கூட்டம் ரெட்கிராஸ் அலுவலகத்தில் நடைபெற்றது நிர்வாக குழு கூட்டம் தலைவர் வழக்கறிஞர் ஆர். எஸ். ராஜ்குமார் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு வருகை தந்த நிர்வாக குழு உறுப்பினர்களை செயலாளர் ஜே. வராதராஜன் வரவேற்றார் பொருளாளர் ஏ. வி. பாலு துணைத் தலைவர் ஆர். எம். டி. நடராஜன் இணை செயலாளர் எஸ். டி. அண்ணாதுரை ஜே ஆர் சி ஒருங்கிணைப்பாளர் ஆர். செந்தில்குமார் ஒய் ஆர் சி ஒருங்கிணைப்பாளர் கே. ஏழுமலை நன்னிலம் வட்டகிளை சேர்மன் இ.ஜி பி. உத்தமன் முத்துப்பேட்டை வட்டகிளை செயலாளர் கே.வி. கண்ணன் மன்னார்குடி வட்டகிளை செயலாளர் கோபாலகிருஷ்ணன் குடவாசல் வட்டகிளை சேர்மன் டி.எஸ்.அசோகன் மற்றும் புலவர் என்கண் மணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் மாவட்ட கிளையின் சார்பாக திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் நடைபெற்ற மூன்று நாள் பேரிடர் மேலாண்மை பயிற்சிகளை சிறப்பாக நடத்திக் முடித்தமைக்காக கே. வி. கண்ணன் அவர்களுக்கு நன்றி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இன்று ஆசிரியர் தினம் என்பதால் ஜே.ஆர்.சி ஒருங்கிணைப்பாளர் ஆர். செந்தில்குமார் மற்றும் ஒய். ஆர். சி. ஒருங்கிணைப்பாளர் கே. ஏழுமலை அவர்களுக்கு மரியாதை தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகவை 70ஆவது பிறந்தநாள் காணும் டி.எஸ் அசோகன் அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது கூட்டப் பொருள் முனைவர் எஸ். டி. அண்ணாதுரை தீர்மானங்கள் வாசித்தார் நிறைவேற்றப்பட்டது இறுதியில் பொருளாளர் ஏ. வி.பாலு நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *