திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடைவீதியில் உள்ள வாசு திருமண மண்டபத்தில் வலங்கைமான் அரசினர் உயர்நிலைப்பள்ளியில் கடந்த 1975-78 ஆம் ஆண்டு கல்வி பயின்ற முன்னாள் மாணாக்கர்கள், ஆசிரியர்களை சந்திக்கும் பொன் சங்கமம் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில் முன்னாள் மாணாக்கர்கள் தலைவர்
ஜி. கனகராஜன் தலைமை வகித்தார்,
செயலாளர் ஜெ. சேகர் அனைவரையும் வரவேற்று பேசினார், நிகழ்வில் ஆசிரியர்கள் எஸ். ராமச்சந்திரன், தமிழ் ஆசிரியர் எஸ்.சைவராஜ், ஏ.பாலகங்காதரன், ஆர்.வாசுதேவன், ஆர்.கிருஷ்ணமூர்த்தி, ஆர்.நந்தகுமார், உடற்கல்வி ஆசிரியர் பி.பட்டாபிராமன், பி.சைவராஜ், ஜி.லோகநாதன், தமிழ் ஆசிரியர் கே.சுப்பிரமணியன் ஆகிய 10 ஆசிரியர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.
75 க்கும் மேற்பட்ட முன்னாள் மாணாக்கர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். நிகழ்வில் ஆசிரியர்களுக்கு பொன்னாடை அணிவித்து, நினைவு பரிசுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டனர்,
அதனைத் தொடர்ந்து வலங்கைமானில் உள்ள அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி பள்ளி மாணாக்கர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்தும் வகையில் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர்களிடம் சுழுல் கோப்பையை முன்னாள் மாணாக்கர்கள் சார்பில் வழங்கப்பட்டது.
நிகழ்வில் 150 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்வின் முடிவில் வருகின்ற கல்வி ஆண்டில் வலங்கைமான் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 10- ஆம் வகுப்பு, +2 வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெறும் மூன்று மாணாக்கர்களை தேர்வு செய்து ஊக்கத்தொகை வழங்குவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் முன்னாள் மாணாக்கர்கள் தலைவர் ஜி. கனகராஜன், செயலாளர் ஜெ. சேகர், துணைச் செயலாளர் ஆர்.மோகன்குமார், பொருளாளர் ஆர்.பழனிவேல் மற்றும் நிர்வாகிகள் நரசிங்க மங்கலம் கோ. தெட்சிணாமூர்த்தி, ஜெய.இளங்கோவன், சா.குணசேகரன், வி.ஜெயராஜ், பா.சிவநேசன், சோம. மாணிக்கவவாசகம், எஸ்.குணசேகரன், ஜி.மதியழகன் மற்றும் முன்னாள் மாணாக்கர்கள் திரளாக குடும்பத்துடன் கலந்து கொண்டனர். நிகழ்வு முடிவில் துணைச் செயலாளர் ஆர். மோகன் குமார் அனைவருக்கும் நன்றி கூறினார்.