திருச்சி தூய வளனார் தன்னாட்சி கல்லூரி தமிழாய்வுத் துறை சார்பில் அறக்கட்டளை சொற்பொழிவு நிகழ்ச்சி கல்லூரி நூலக அரங்கில் நடைபெற்றது தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி முதல்வர் அருள் முனைவர் மரியதாஸ் தலைமை வகித்தார். உதவி பேராசிரியர் முனைவர் பெஞ்சமின் ஆரோன் டைட்டஸ் அறிமுக உரையாற்றினார்
தமிழாய்வுத் துறைத் தலைவர் முனைவர் ஜோசப் சகாயராஜ் வாழ்த்துரை வழங்கினார். புழங்கு பொருட்கள் சேகரிப்பாளரும் வரலாற்று ஆய்வாளருமான விஜயகுமார் தமிழரின் தொல்லறிவு குறித்து பேசுகையில்,தமிழரின் தொல்லறிவு என்பது, தொல்லியல் அகழாய்வுகள், கல்வெட்டுகள், இலக்கியங்கள் மூலம் அறியப்படும் தமிழர்களின் மிக நீண்ட வரலாற்றையும், பண்பாட்டையும் குறிக்கும். உலகின் தொன்மையான நாகரிகங்களில் ஒன்றான தமிழர் நாகரிகம், உயர்ந்த கலை, இலக்கிய, அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சி, மற்றும் மேன்மையான வாழ்வியலைக் கொண்டிருந்தது எனறார்.
முன்னாள் துணை முதல்வர் பாக்கிய செல்வரதி, முனைவர் சலேத் உள்ளிட்ட பல பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் நிகழ்வில் பங்கேற்றனர். முன்னதாக இணைப்பேராசிரியர் முனைவர் வில்சன் வரவேற்க, நிறைவாக உதவி பேராசிரியர் முனைவர் நல்லமுத்து நன்றி கூறினார்.