அரசு பேருந்தில் தம்பதியினர் தவற விட்ட 8பவுன் நகை ரூ3 லட்சம் பண பேக்கை மீட்டு ஒப்படைத்த போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டு
துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூர் சிக்கம் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த அன்பன் ஜெயசுதா தம்பதியினர் நேற்று முன்தினம் பொள்ளாச்சியில் உள்ள தனது உறவினரின் வீட்டு நிகழ்ச்சிக்கு செல்ல 8பவுன் நகை மற்றும் ரூ 3லட்சம் ரொக்கம் உள்ள பேக்குடன் துறையூர் பேருந்து நிலையம் வந்துள்ளனர்.
இரவு 10. 30 மணி அளவில் வந்த ஊட்டி செல்லும் அரசு பேருந்தில் இருக்கை பிடிப்பதற்காக ஜன்னல் வழியாக நகைகள் வைத்திருந்த பேக்கை பேருந்து இருக்கையில் வைத்துள்ளனர். பின்னர் பேருந்தில் ஏறி இருக்கையில் தனது பேக் இல்லாததால் அதிர்ச்சி அடைந்து பஸ்சை விட்டு கீழே இறங்கி விட்டார்.பின்னர் பேருந்து புறப்பட்டு சென்றது.தகவல் அறிந்த துறையூர் இன்ஸ்பெக்டர் முத்தையன் தகவலின் பேரில் தா.பேட்டை காவல் ஆய்வாளர் வீரமணி அப்பொழுது ரோந்து பணியில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சஞ்சீவி, தலைமை காவலர் நவீன்குமார் , காவலர்கள் சுரேஷ், தெய்வீகன் ஆகியோர் தா.பேட்டைக்கு வந்த அரசு பேருந்தை நிறுத்தி சோதனை செய்ததில் ஒரு இருக்கைக்கு அடியில் பணம் பேக் இருந்து கண்டெடுக்கப்பட்டது.முசிறி டிஎஸ்பி சுரேஷ்குமார் உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளர் வீரமணி உடனே சம்பந்தப்பட்ட தம்பதியினரை வரவழைத்து நகை பணம் பேக்கை ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தை அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநகரத்தினம் போலீசாரை நேரில் வரவழைத்து பாராட்டி சான்றிதழ் வழங்கினார். துரிதமாக செயல்பட்ட காவல்துறையினருக்கு பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்