எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
இளம் சிறார்களுக்கு நல்ல புத்தகங்களை கொடுத்து ஊக்குவித்து எதிர்கால தலைமுறை சிறப்பாக உருவாக்கினால் நாடு நன்றாக இருக்கும்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் குழந்தை கவிஞர் அழ. வள்ளியப்பா, நூலக தந்தை அரங்கநாதன் ஆகியோர் நினைவாக ரோட்டரி சங்கம், விவேகானந்த கல்வி குழுமம், திருக்குறள் பண்பாட்டுப் பேரவை, கே.பி.எஸ்.மணி பேரவை தமிழ் பல்லவி இலக்கிய வட்டம் ஆகியவற்றின் முன்னெடுப்பில் நிவேதிதா பதிப்பகத்தின் 22 சிறார் நூல்கள் வெளியீடு மற்றும் புத்தகக் கண்காட்சி நடைபெற்றது. பள்ளி தாளாளர் ராதாகிருஷ்ணன் புத்தக கண்காட்சியை தொடங்கி வைத்தார். நிவேதிதா பதிப்பகம் தேவகி ராமலிங்கம் ஏற்பாட்டில் நூல்கள் வெளியிடப்பட்டது. நூல்களை சீர்காழி பகுதியைச் சேர்ந்த பல்வேறு பிரபலங்கள், எழுத்தாளர்கள் பெற்றுக் கொண்டனர். சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம், முன்னாள் நகர் மன்ற தலைவர் கனிவண்ணன், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். எழுத்தாளர்கள் யார் கண்ணன், ராசி. அழகப்பன்,பட்டிமன்ற பேச்சாளர் குறிஞ்சிப்பாடி நவஜோதி, நெய்வேலி பாரதிக்குமார் ஆகியோர் பங்கேற்று வாசிப்பை நேசிப்போம் என்ற தலைப்பில் சிறப்புறையாற்றினர். பல்லவி குமார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்
தொடர்ந்து நூலாசிரியர் தேவகி ராமலிங்கம் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
சீர்காழியில் ரோட்டரி சங்கம், விவேகானந்தா கல்வி நிறுவனம் உள்ளிட்டவைகள் முன்னெடுப்பில் 22 சிறார் நூல்கள் நிவேதிதா படிப்பகம் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.
20 நூல்கள் திட்டமிட்டு இறுதியில் 22 நூல்கள் வெற்றிகரமாக வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக சிறார் நூல்கள் வெளியிடப்பட்டுள்ளது. இந்திய மொழிகளில் எந்த மொழியிலும் இதுவரை வராத விதமாக தமிழ் மொழியில் 26 பெண் எழுத்தாளர்களின் படைப்புகள் ஞானசம்பந்தர் பிறந்த சீர்காழியில் வெளியிடப்பட்டுள்ளதுபெருமைக்குரிய விஷயம்.எல்லோரும் இணைந்து கூட்டு முயற்சியாக இந்த 22 நூல்கள் வெளியிட்டுள்ளோம் என்றார்.
எழுத்தாளர் யார் கண்ணன் ஒரு கையில்
சீர்காழியில் 22 நூல்கள் வெளியிடப்பட்டுள்ளது இதற்கு முன்பு சென்னையில் அண்ணா நூலகத்தில் 30 நூல்கள் வெளியிட்டு விழா நடந்துள்ளது. அழ.வள்ளியப்பாவின் நூற்றாண்டு நினைவாக இன்றைய குழந்தைகள், சிறார்கள்,மாணவ மாணவிகளுக்கு 30 வருடங்களுக்கு முன்பு உள்ள பழைய கதைகள், பாட்டுகலையே திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டுள்ளோம் என்ற நிலையை மாற்றுவதற்காக நிவேதிதா பதிப்பகத்தின் ராமலிங்கம் துணைவியார் தேவகி ராமலிங்கம் நூல்களை வெளியிட்டுள்ளார்.
குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் இது ஒரு வியாபார நோக்கம் இல்லாமல் சேவையாக கல்விப் பணியாக வெளியிட்டுள்ளார்.
எதிர்கால தமிழகத்தை உருவாக்குவதற்காக பல்வேறுபட்ட எழுத்தாளர்களை, வெவ்வேறு ஆளுமைகளை குறிப்பாக நல்ல சிறுவர்கள் கதை எழுதுபவர்கள், சிறுவர்கள் பாட்டு எழுதுபவர்கள் ஆகியோரை தேடி பிடித்து அவர்களின் புத்தகங்களை தொகுப்பாக்கி, வண்ண வண்ண படங்களுடன், பக்க வரைவுகளுடன், எல்லோரும் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் எளிய விலையில் தள்ளுபடியுடன் இந்த புத்தக கண்காட்சியுடன் நூல் வெளியிடப்பட்டுள்ளது.சென்னையில் நடக்க வேண்டிய விழாவை சீர்காழியில் நடத்தி வெற்றி கரமாக நூல்களை வெளியிட்டுள்ளார்.
எழுத்தாளராக,நடிகராக இருந்தாலும் கூட இது மாதிரி புத்தகங்கள் எழுதுவதிலும் அதை கொண்டு போய் சேர்ப்பதிலும் முழு ஆத்ம திருப்தி கிடைக்கிறது.எழுத்தாளர்கள், பதிப்பகத்திற்கு கரம் கொடுக்க புத்தகங்களை வாங்குவோம்.
பள்ளி மாணவர்களுக்கு, சிறார்கள், குழந்தைகளுக்கு, சின்ன வயதில் நர்சரி ரைம்ஸ் ஆங்கிலத்தில் சொல்வது போல் இந்த சிறார் புத்தகங்களை சிறார்கள், குழந்தைகளுக்கு கொடுத்து,புத்தகத்தில் உள்ள பாடல்களை நான்கு வரிகளை சொல்ல சொல்லி பரிசுகளை கொடுத்து சிறார்கள் குழந்தைகளை ஊக்குவிப்போம்.
புத்தகம் வாங்குவதற்கு குழந்தைகளுக்கு பணம் கொடுப்போம்.வளரும் இந்தியாவை எதிர்கால தலைமுறையை சிறப்பாக உருவாக்கினால்.நாடு நன்றாக இருக்கும் இந்தியா நன்றாக இருக்கும் உலகளவில் இந்தியாவிற்கு நல்ல பெயர் கிடைக்கும் என்றார்