திருச்சி காட்டூர் மாண்ட் போர்ட் பள்ளியில், பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான விழாவில் 10- ஆம் வகுப்பு, 12- ஆம் வகுப்பு அரசு பொது தேர்வுகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற 2982 அரசு, அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் தமிழ் பாடத்தில் 100 மதிப்பெண் பெற்ற 142 மாணவ, மாணவிகள் என மொத்தம் 3, 124 நபர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் கே என் நேரு ஆகியோர் கலந்து கொண்டு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினர்.
மண்ணை
க. மாரிமுத்து.