பசும்பொன் உ.முத்துராமலிங்க தேவருக்கு பாரதரத்னா விருதுபரிந்துரை கமுதியில் அதிமுகவினர் கொண்டாட்டம்
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் புகழுக்கு கௌரவிக்கும் வகையில் மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்கிட வலியுறுத்தி பரிந்துரைத்த தமிழக முன்னாள் முதல்வர் எதிர்க்கட்சித் தலைவர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு நன்றி தெரிவித்து வரவேற்கும் வகையில் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி முத்துராமலிங்கத் தேவர் பேருந்து நிலைய வளாகத்தில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருவுருவ சிலைக்கு கமுதி தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் எஸ் பி காளிமுத்து மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் கருமலையான் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் மகளிர் அணியினர் ஏராளமானோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி கௌரவித்து பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி ஏராளமான அதிமுகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.