கோவையில் மூன்று நாட்கள் நடைபெற உள்ள இதில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கு பெற வாய்ப்பு
கோவையில் மூலபொருட்கள் மற்றும் ஆதார வளங்கள் குறித்த கண்காட்சியான ரா மேட் இந்தியா 2025 எனும் கண்காட்சி வரும் 11ம் தேதி முதல் 13ம் தேதி வரை கொடிசியா வளாகத்தில் நடைபெற உள்ளது..
இந்திய அளவில் பல்வேறு தொழில் துறையினர் கலந்து கொள்ள இது தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு கொடிசியா அலுவலகத்தில் நடைபெற்றது..
இதில் ரா மேட் கண்காட்சி தலைவர் சரவணகுமார் மற்றும் கொடிசியா தலைவர் கார்த்திகேயன் ஆகியோர் பேசுகையில்,இந்தியாவின் முன்னனி கண்காட்சியான இதில் தொழில் துறை தொடர்பான பங்கேற்பாளர்களுடன், பொறியியல், ஜவுளி, ஆட்டோமொபைல், மின்சாரம் மற்றும் மின்னணுவியல், விவசாயம், ரயில்வே போன்ற துறைகளுக்கான மூலப்பொருட்கள் கண்காட்சியில் இடம்பெற உள்ளதாக தெரிவித்தனர்…
குறிப்பாக இக்கண்காட்சியில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களான, குஜராத், கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து தொழில் முனைவோர்கள் வருகை தர இருப்பதாகவும், , 70 க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட உள்ளதாகவும், சுமார் 8000முதல், 10ஆயிரம் பேர் தோராயமாக கலந்து கொள்ளுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்தனர்..
நான்காவது பதிப்பாக நடைபெறும் இதில், பெரும் தொழிற்சாலைகள், சிறுகுறு நிறுவனங்கள், வேதி பொருட்கள் தொழிற்சாலைகள், மரப்பொருள் தொழிற்சாலைகள், எம்எஸ்எம்இ நிறுவன உரிமையாளர்கள், ஆட்டோமொபைல் தொழிற்சாலைகள், டூல்ஸ் உற்பத்தியாளர்கள், பிளாஸ்டிக் உதிரிபாக தொழிற்சாலைகள், என பல்வேறு வர்த்தக நிறுவனங்கள் பயன்பெறுவார்கள் என குறிப்பிட்டனர்…