தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 247 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை மனுக்களை மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் பொது மக்களிடமிருந்து பெற்றுக்கொண்டார்
இந்த கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை புதிய வீட்டு மனை பட்டா வேலைவாய்ப்பு மற்றும் இதர மனுக்கள் 247கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது குறித்த காலத்துக்குள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்
இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜ. மகாலட்சுமி தனித்துணை ஆட்சியர் சாந்தி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் முத்து மாதவன் உதவி ஆணையர் முத்துலட்சுமி கலால் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் சம்பூர்ணம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி மற்றும் பொதுமக்கள் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.