லாரிகள் நிறுத்தும் ஷெட் அமைத்து அதில் நிறுத்தப்பட்டு இருந்த லாரிகளை மணலி போலீசார் பாதுகாப்புடன் அப்புறப்படுத்திய அதிகாரிகள்
சென்னை மாநகராட்சி, மணலி மண்டலம்17 வது வார்டு, கொசப்பூர் பிரதான சாலையில் அரசுக்கு சொந்தமான இடத்தில் லோகநாதன் என்பவர் லாரி செட் அமைத்து ஆக்கிரமித்திருந்தார்.
அரசு நிலம் ஆக்கிரமிப்பட்டிருப்பதை உறுதி செய்த மணலி மண்டல பொறுப்பு உதவி கமிஷனர் தேவேந்திரன், உதவி செயற்பொறியாளர்கள் தென்னவன், சுமித்ரா உள்ளிட்ட ஆதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஆக்கிரமிப்பில் இருந்த, 10,000 சதுர அடி நிலத்தில் இருந்த லாரி மற்றும் லாரிகள் போலீசார் பாதுகாப்புடன் அப்புறப்படுத்தப்பட்டு, அந்த இடத்தை கையகப்படுத்தப்பட்டது. இதன் மதிப்பு ஒரு கோடி ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்தனர்