கோயம்புத்தூர்

கோவையில் இந்தியாவின் சக்திவாய்ந்த குளோபல் சோலார் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடைபெறுகிறது. கோவையில் செப்டம்பர் 11–12, 2025 காலை 9:30 மணி முதல் மாலை 6:30 மணி வரை கோடிசியா ஹால் D, நடைபெற உள்ளது.

இம்மாநாட்டை EQ International Magazine (EQMagPro) மற்றும் C2Z – Net Zero & Decarbonisation Marketplace இணைந்து நடத்துகின்றன. GABA (Green and Aatmanirbhar Association) மற்றும் ISA (Indian Solar Association) ஆகியவை ஆதரவு வழங்குகின்றன.

முக்கிய அம்சங்கள்:
● வணிக, தொழில் & வீட்டு பயனாளர்களுக்கான முதலீடு இன்றிய சோலார்

● PM Kusum & PM Suryaghar திட்டங்கள் – முழுமையான உதவி வழங்கப்படுகிறது

முக்கிய விருந்தினர்கள்:

இந்த எக்ஸ்போவை கோயம்புத்தூர் மேயர் திருமதி கே. ரங்கநாகி திறந்து வைக்கின்றார். மேலும் மாநில போக்குவரத்து & மின்சாரம் துறை அமைச்சர் திரு எஸ்.எஸ். சிவசங்கர், TANTRANSCO & TIDCO உயர் அதிகாரிகள், தொழில் முன்னோடிகள் பங்கேற்கின்றனர்.

முக்கிய வாய்ப்புகள்:
● முன்னணி சோலார் நிறுவனங்களுடன் நேரடி சந்திப்பு (Renfra, Polycab, Havells, Panasonic, Sungrow, Swelect, Goldi Solar உள்ளிட்டோர்)

● நிதியாளர்கள், முதலீட்டாளர்கள், பயன்பாட்டு நிறுவனங்கள் மற்றும் நிபுணர்களுடன் இணைப்பு

● தமிழ்நாடு ஏற்கனவே 10.8 GW சோலார், 11.9 GW காற்றாலை கொண்டு முன்னிலை வகிக்கிறது; எதிர்காலத்தில் 1.2 லட்சம் மெகாவாட் சோலார் திறன் உருவாக்கும் வாய்ப்பு உள்ளது.

CMD திரு. ஆனந்த் குப்தா கூறுகையில் “சோலாரால் இயங்கும் மின்சார வாகனங்கள், இறக்குமதி எரிபொருள் குறைப்புகள், மற்றும் சுத்தமான ஆற்றல் மூலம் உண்மையான ஆத்மநிர்பர் பாரத் அடைய உதவுவதே எங்கள் நோக்கம்.” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *