கரூர் செய்தியாளர் மரியான் பாபு
முதன்மை முதல்வர் முனைவருக்கு பாராட்டு விழா..
கரூர் மாவட்டத்தில் தமிழக அரசின் டாக்டர்.ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது. அதில் ஒருவரான பரணி பார்க் கல்விக் குழும முதன்மை முதல்வர்
முனைவர் ராமசுப்பிரமணியனுக்கு தமிழக அரசால் சிறந்த ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான டாக்டர். ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது பெற்றுள்ள பரணி பார்க் கல்விக் குழும முதன்மை முதல்வர் முனைவர் சொ.ராமசுப்பிரமணியனுக்கு பள்ளியில் பாராட்டு விழாவும், ஆசிரியர் தினவிழா கொண்டாட்டமும் நடைபெற்றது.
இவ்விழாவிற்கு பள்ளியின் தாளாளர் சா.மோகனரங்கன் தலைமை தாங்கினார், செயலர் பத்மாவதி மோகனரங்கன், அறங்காவலர் சுபாஷினி அசோக்சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஸ்ரீசங்கர வித்யாலயா பள்ளியின் தாளாளர் அசோக்சங்கர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு நல்லாசிரியர் விருது பெற்ற பரணி பார்க் கல்விக் குழும முதன்மை முதல்வர் முனைவரை பாராட்டி வாழ்த்தினார்.
மாணவர்களின் கல்வி வளர்ச்சி மற்றும் கல்வி மேம்பாட்டிற்காக தீவிரமான பணியாற்றி, சிறப்பான தலைமைத்துவ திறன்களை வெளிப்படுத்தி, சமுதாயத்தில் கல்வியின் முக்கியத்துவத்தை உயர்த்தும் வகையில் செயல்பட்ட, பள்ளியின் முதன்மை முதல்வர் முனைவர் சொ.ராமசுப்பிரமணியனுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட்டுள்ளது.
நமக்கு பெருமைக்குரியது என்றும் வானில் பளிச்சிடும் ஆதவன் போல, வாழ்வில் மாணவர்கள் பிரகாசிக்க அறிவுச் சுடர் கொடுத்து, மாணவர் நலனே பணி என்று நமது கல்வி நிறுவனங்களுக்கு மணிமகுடம் சேர்த்துள்ளார். என்றும் பள்ளியின் தாளாளர் சா.மோகனரங்கன் பாராட்டி வாழ்த்தினார்.
முனைவர் சொ.ராமசுப்பிரமணியன் இந்திய தேசிய பாதுகாப்பு அமைச்சகத்தின் முன்னாள் உறுப்பினராகவும், மாநில ஜூடோ, கேரம் போன்ற சங்கங்களின் துணைத் தலைவராகவும், கொங்கு சகோதயா சி.பி.எஸ்.இ பள்ளி முதல்வர்கள் கூட்டமைப்பின் தலைவராகவும், பாரத சாரண, சாரணியர் அமைப்பின் தமிழ்நாடு மாநில உதவி ஆணையராகவும், பரணி பார்க் சாரணர் மாவட்ட முதன்மை ஆணையராகவும், மாவட்ட ஜூடோ, கைப்பந்து, ஃபென்சிங்க் அமைப்பின் தலைவராகவும் விளங்குகிறார்.
கல்வியின் மேம்பாட்டிற்காக சேவை நோக்கோடு, கல்வி நிர்வாகத்தில் முன்னோடியாக திகழ்கிறார். மேலும் கல்வி, விளையாட்டு போன்ற அனைத்து துறைகளிலும் சர்வதேச, தேசிய, மாநில சாதனை மாணவர்களை உருவாக்கியுள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்விழாவில் பரணி வித்யாலயா முதல்வர் சு.சுதாதேவி வரவேற்புரையாற்றினார்,
எம்.குமாரசாமி கல்வியியல் கல்லூரி முதல்வர் சாந்தி வாழ்த்துரை வழங்கினார். பரணி பார்க் முதல்வர் க.சேகர் நன்றியுரையாற்றினார். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை நிர்வாக அலுவலர், துணை முதல்வர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் ஆசிரியர்கள்,மாணவ,மாணவிகள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பாக செய்திருந்தனர்.